பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 101

கோகிலாம்பாளை இன்ஸ்பெக்டரிடம் அனுப்பி இருக்கவேண்டு மென்ற நிச்சயம் உடனே அவளுக்குப் பட்டுவிட்டது. கோகிலாம்பாள் அப்படியும் கேவலமாக நடந்தகொள்வாளா என்ற ஆச்சரியமும், அவள் அப்படி நடந்து தன் மனோபீஷ்டம் நிறைவேறாமல் கெடுத்து விட்டாளே என்ற ஆத்திரமும் ஆவேசமும் கட்டிலடங்காமல் எழுந்தன. அவளது தேகம் தடதடவென்று ஆடத் தொடங்கியது. கோகிலாம்பாள் அப்போது அவ்விடத்தில் இருந்தால், அவளது கால்களைப் பிடித்து இரண்டாய்க் கிழித்துவிடலாமே, அவள் இல்லையே என்று நினைத்துப் பதறிக் கடுஞ்சினம் கொண்ட சிங்கம் போல மாறினாள். தான் அதற்கு மேலும் டெலிபோன் யந்திரத்தண்டை நின்று சுந்தரமூர்த்தி முதலியாருக்கு ஏதேனும் மறுமொழி கூற வேண்டும் என்பதைக் கவனியாமல், பக்கத்திலிருந்த புஷ்டாவதியை நோக்கி சுந்தரமூர்த்தி முதலியார் கூறிய வரலாற்றைச் சுருக்கமாய் இரண்டொரு சொற்களில் விவரித்து, அவளே வந்து அவருக்கு மறுமொழி கொடுக்கும்படி அழைக்க, புஷ்பாவதி உடனே டெலிபோண்ண்டை போய்ப் பேசி அவருக்கு ஏதோ இரண்டொரு வார்த்தைகள் கூறி, கோகிலாம்பாளை அழைத்துக் கொண்டு வரும்படி கூறியபின் டெலிபோனை முடித்துவிட்டு இப்பால் வந்துவிட்டாள். -

செளந்தரவல்லியம்மாள் சுந்தரமூர்த்தி முதலியாரின் விஷயத்தில் கொண்ட விரக வேதனையும் ஆவல் தீயும் கோகிலாம்பாளின் மீது பெருத்த பகைமையாகவும் சகிக்க வொண்ணாத ஆத்திரமாகவும் மாறின. பிரளய காலத்துச் சண்டமாருதம் போல அவளது மனத்தில் அபாரமான கோபாவேசம் மூண்டெழுந்தது. தான் அடைய எண்ணியிருந்த பேரின்ப சுகத்திற்கு இடையூறாகக் கோகிலாம்பாள் குறுக்கிட்டு, தமது மணாளரின் மனது முறிந்து மாறிப்போய், தன்னை வெறுத்து விலக்குமாறு துாண்டத்தக்க இழிவான காரியங்களைச் செய்துவிட்டாளே என்ற ஆங்காரமும் ஆவேசமும் பெருத்த காட்டுத் தீ போல மூண்டு பற்றினரியத் தலைப்பட்டன. அவள் அந்த இரண்டொரு நிமிஷ காலத்தில் சுந்தரமூர்த்தி முதலியாரையும் மறந்தாள் புஷ்பாவதியம்மாளையும் மறந்தாள்;