பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 109

சகவாசமும் ஓயாமல் கிடைத்துக்கொண்டே இருந்தன. அவர்களுள், உலகத்தின் அநித்தியத் தன்மையை உணர்ந்து, மனப்பூர்வமாக உலகைத் துறந்து பரம்பொருள் ஒன்றையே நாடிநின்ற அபார புத்தியுள்ள மேதாவிகளும் சிலர் காணப் பட்டனர். ஆதலால் அவர்களுடன் சம்பாவிப்பதும் பொழுதைப் போக்குவதும் திவானுக்கு இன்பகரமாகவும், தமது துயரத்திற்கும் விரக்திக்கும் ஒரு பெரிய ஆறுதலாகவும் இருந்தன. அவ்வாறு அவர் நல்லோர் இணக்கமும், அறிவாளர் துணையும் பெற்றே அநேகமாய்த் தமது யாத்திரையை நடத்திக்கொண்டு சென்றார். ஆதலால், அவர் சென்ற இடத்திலெல்லாம், அவருக்கு அநேக மாய் மரியாதையான வரவேற்பும், உபசரணையும், தர்ம போஜனமும் கிடைத்து வந்தன. ஆகவே, அவர் தமது இடையில் பையில் கட்டி வைத்திருந்த நோட்டுகளை வெளியில் எடுப்பதற்கே பிரமேயம் ஏற்படாமல் போயிற்று. மற்ற துறவிகளோடு நெருங்கிப் பழகப் பழக, நமது திவான் முதலியாரும் அநேகமாய் உலகப் பற்றையொழித்து மெய்ஞ் ஞானத்தை நாடி அலையும் ஜீவன் முத்தராக மாறிக்கொண்டே இருந்தார். அவரது உடம்பு கறுத்துத் துரும்புபோல மெலிந்து போயிற்று. கன்னங்களின் எலும்புகள் மேலோங்கி நின்றன. முதன் முதலில் அவர் தமது சிரத்தை மொட்டையாக்கிக் கொண்ட பிறகு அப்படியே விட்டு விட்டார். ஆதலால், மறுபடி அவரது தலையில் உரோமம் வளர்ந்து பெருத்த ஜடைகளாய்த் திரண்டு போயிற்று. முகம் முழுதும் உரோமம் மூடிக்கொள்ள, அவரது மோவாயின் கீழ் சாமரை போல ஒரு சாண் நீளத்தில் தாடியும் ஏற்பட்டுவிட்டது. ஆகவே, அவரது பழைய தோற்றம் அடியோடு மாறிப்போய் விட்டது. அவரது பழைய மேம்பாடு முற்றிலும் மறந்துபோய் விட்டது. அவர் அதற்குமுன் மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் மகாராஜனுடைய பதவியில் இருந்தவர் என்ற குறிப்பாவது, இங்கிலீஷ் பாஷையில் எம்.ஏ. பட்டம் பெற்ற மேதாவி என்ற குறிப்பாவது சிறிதும் தெரியாதபடி அவர் கேவலம் பரதேசிகளுள் ஒருவராய் மாறிப் போனதன்றி அவர் பழைய பெருமைப்பாட்டையாவது, அதிகார தோரணையையாவது, பெருந்தன்மையான தோற்றத்தையாவது வகிக்காமல், ஏழையிலும் பரம ஏழையாகவும், அடியார்க்கு