பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் ii.1

அளித்திருப்பதாக அல்லவா நான் நினைத்து மன மகிழ்ந் திருந்தேன். அது கிஞ்சித் போகமாக முடிந்ததே. காந்திமதி: வெளிக்கு என்னிடம் நீ வஞ்சகமாக நடந்து உள்ளுக்குள் இன்னொரு ஆசை நாயகனையா நினைத்து உருகிக் கொண்டிருந் தாய்! சே! பிறருடைய சாட்சியங்களினால், இப்பேர்பட்ட அபவாதத்திற்கு நீ இலக்கானாய். ஆனாலும், என் மனம் மாத்திரம் அதை இப்போது உண்மையென்று நம்ப மாட்டேன் என்கிறதே! அப்படியானால், திருவடமருதுாருக்கு வந்த நீ எங்கேதான் மாயமாய் மறைந்து போனாயோ தெரியவில்லையே! உனக்கும் நம் அருமைப் புதல்வன் ராஜாபகதூருக்கும் திடீரென்று என்ன அபாயந்தான் நேர்ந்ததோ தெரிய வில்லையே! என்று திவான் முதலியார் ஒவ்வொரு நாளும் அவர்களை நினைத்து நினைத்துப் பாகாய் உருகுவதும், பிறகு, ‘சே! என்ன நினைவு இது? அவர்கள் யார்? நான் யார்? அவர்களை நான் ஏன் நினைத்து அழுகிறேன்! அவர்கள் என்னோடு இருக்கவும், அதனால் மூவரும் ஆநந்தமடையவும் கொஞ்ச காலத்திற்குத்தான் பரமாத்மாவின் கட்டளை போலிருக்கிறது! கொடுத்தவன் எடுத்துக் கொண்டான். அவர்களை எனக்காக நானா சிருஷ்டித்துக் கொண்டேன். எவனோ படைத்துக் கொடுத்தான்; எவனோ அபகரித்துக் கொண்டான். அவர்கள் என்னோடு இருந்தவரையில்தான் என் உடைமை. அவர்களைக் குறித்து என் மனம் ஏன் இப்படி உருகித் தவிக்கிறது! மனிதன் உடம்பை என்னுடையது என்னுடையது என்று நினைத்து அல்லும் பகலும் இதை போஷித்துக் காப்பாற்றி வளர்க்கிறான். கடைசியில் உயிர் வேறு உடல் வேறாய்ப் பிரிந்துபோகின்றன. அதன்பிறகு அந்த உயிர்தான் இந்த உயிரற்ற உடம்பை நினைத்து வருத்தப்படட் போகிறதா, அல்லது இந்தப் பிணந்தான் அதற்குமுன் தனக்குள் இருந்து பிரிந்துபோன உயிரைப்பற்றி நினைத்து விசனமடையப் போகிறதா? இரண்டுமில்லை. மனிதனுடைய சொந்த உடம்பின் கதியே இப்படி இருக்கையில் அதற்குமுன் தன்னோடிருந்து பிரிந்துபோன மனைவி மகனை நினைத்து அவன் விசனித்து அழுவது மூடத்தனமேயன்றி வேறல்லவென்பது தெரிந்திருந்தும், அந்த நினைவை அவன் விலக்க முடியாமல் அழுது புலம்பியே