பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii.6 செளந்தர கோகிலம்

தந்திரமாகவும் உன்னிடம் நடந்து கொண்டிருக்கிறாள் என்றே நினைக்கிறேன். நீயும் அவளால் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டே இருக்க வேண்டுமென்பதைப்பற்றி சந்தேகமே இல்லை. என்னோடு இருந்தால் எப்பேர்ப்பட்ட அபாரமான செல்வத்தில் நீ இருந்து சுகப்படுவாய்! இப்போது நீ உன் தாயின் வஞ்சகத்தில் பட்டு என்ன நிலைமையில் இருக்கிறாய் என்பது தெரிய வில்லையே! சரியான பொருளுதவி இல்லாமையினால் நீ எவ்விதமான கஷ்டங்களுக்கு ஆளாயிருக்கிறாயோ தெரிய வில்லையே! நியாயமாய்ப் பார்த்தால் என் தந்தையிடத்தில் இருக்கும் சொத்துகளும் இப்போது என்னிடத்தில் இருக்கும் பெருத்த பணத்தொகையும் உன்னையே சேரவேண்டியவைகள் அல்லவா? என் தகப்பனாரிடம் இருப்பவை போனாலும், இப்போது என்னிடம் இருப்பதே உனக்கு ஏராளமாய்விடுமே. நீ இருக்கும் இடம் தெரிந்தால் இதையாவது உனக்கு அனுப்பிவிடுவேனே என் கண்ணே! என் அருங்குன நிதியே! நீ எங்கே இருக்கிறாயோ தெரியவில்லையே! நான் எப்படி உன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கப் போகிறேன்” என்று திவான் சாமியார் அடிக்கடி பலவாறு பிரலாபித்துத் தமக்குத் தாமே விம்மி விம்மியழுது கண்ணிர் சொரிவார்.

அவ்வித மனநிலைமையில் அவர் வடக்குத் திக்கிலிருந்து சென்னைக்கு வந்தார் வந்தவர் அந்தப்பட்டணத்தின் தெருக்களோடு போய்க் கொண்டிருந்த காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு பிரபலமான கட்டிடத்தை அவர் தற்செயலாகப் பார்த்தார். அது ஒரு தினசரி சமாசாரப் பத்திரிகையின் காரியாலயம் என்று அவர் உணர்ந்தார். அப்போது அவரது மனத்தில் ஒரு யுக்தி தோன்றியது. தாம் அந்தப் பத்திரிகையில் ஒரு விளம்பரம் பிரசுரித்தால், அதன் மூலமாய்த் தமது மகன் இருக்கும் இடம் தமக்குத் தெரியலாம் என்ற யோசனை தோன்றவே, அவர் அவ்வாறே செய்ய வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டு, மறைவான ஒரிடத்திற்குச்சென்று, தமது மடியிலிருந்து அதற்குத் தேவையான பணத்தொகையை உத்தேசமாக எடுத்து வைத்துக்கொண்டு, அந்தக் காரியாலயத் திற்குள் நுழைந்து, அடியில் வரும் விளம்பரத்தை மறு நாளைய பத்திரிகையில் வெளியிடும்படி ஏற்பாடு செய்து, அதற்குரிய