பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 செளந்தர கோகிலம்

அளவற்ற விசனத்தைத் தாங்கமாட்டாமல் அவரது ஹிருதயம் வெடித்துவிடுமோ என்ற நிலைமைக்கு வந்துவிட்டது; அவர் மின்சார சக்தியால் தாக்கப்பட்டவர் போல அந்த ஸ்திரியை நோக்கி, ‘ஆ அப்படியா! பெரியவரா இறந்துபோய்விட்டார்? அடடா, ஐயோ! அவருக்குக் கொள்ளி போட்டது யார்? கருமாதி முதலிய அந்தியக் கிரியைகளை யெல்லாம் செய்தது யார்? அவருடைய மூத்த பிள்ளை இறந்து போய் விட்டாரே! பிறகு அவருக்கு ஏதாவது குழந்தைகள் உண்டா?” என்றார்.

அந்த ஸ்திரீ, “அவருடைய பிள்ளை இறந்துபோய் விட்டால், அதன்பிறகு பெரியவருடைய பிணம் சுடுகாட்டுக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துவிடப் போகிறதா? யாராவது கொள்ளிபோட்டுக் கொளுத்தாமல் சும்மா விட்டுவிடப் போகிறார்களா? எப்படியோ கிழவருடைய காரியம் முடிந்தது. அவருக்குக் குழந்தையுமில்லை, குட்டியுமில்லை, கலியாணம் ஆனபிறகு அவர் தம்முடைய பெண் ஜாதியைத் தம்முடைய கையால் தொட்டுக்கூட இருப்பாரோ? மாட்டாரோ? அவர் தம்முடைய பெரிய பிள்ளை போன விசனத்தில் இடிந்து உட்கார்ந்து போனவர் அதன்பிறகு தேறவே இல்லை. அவருடைய மருமகளும், பேரனும் போனவர்கள் போனவர் களே. நாளது தேதி வரையில் அவர்களைப் பற்றி எவ்விதமான செய்தியும் கிடைக்கவில்லை” என்றாள்.


சாமியார், ‘ஆ! அப்படியா! அப்படியானால் இப்போது பெரியவருடைய சொத்துக்களை யெல்லாம் அவருடைய இரண்டாவது சம்சாரமும், அவளுடைய தாய் தகப்பன்மாரும்

வைத்து அநுபவித்துக்கொண்டிருக்கிறார்களா?” என்றார்.

அந்த ஸ்திரீ, ‘கிழவர் இறந்த பிறகு ஒரு மாச காலம் வரையில் அவர்கள் இந்த ஊரில் இருந்தார்கள். அதற்குள் அவர்கள் இந்த வீடு, நிலம் முதலிய சொத்துக்களையெல்லாம் விற்றுப் பணமாக்கி எடுத்துக்கொண்டு இரவோடிரவாய் எங்கேயோ போய் விட்டார்கள். இப்போது அவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது” என்றாள்.

திவான், “அம்மணி பெரியவர்கள் அவருடைய இளைய சம்சாரத்தைக் கையால் தொட்டுக்கூட இருக்கமாட்டார்கள்