பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i54 செளந்தர கோகிலம் -

சேர்ந்தவர் அதற்குமுன் இரண்டு தடவைகளில் போய்த் தங்கிய திண்ணையை அடைந்து “சம்போ சங்கரா’ என்று வாய்விட்டுக் கடவுளை அழைத்த வண்ணம் அதன்மேல் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து சிறிதுநேரம் ஒய்ந்திருந்தபடி இளைப் பாறினார். அவரது கண்கள் அந்த வீட்டிற்கு எதிரிலிருந்த தமது மாளிகையை ஆசையோடு பார்த்தபடி ஒரே நிலையில் நின்றன. தமது தந்தையார் இருந்த மாளிகையைப் பார்க்கவே அவரது மனதில் பழைய நினைவுகள் யாவும் சண்டமாருதமாய்க் கிளம்பி சகிக்க வொண்ணாத வேதனையையும் துயரத்தையும் உண்டாக்கத் தொடங்கின. கடைசியாகத் தமது தந்தை அந்த இல்லத்தில் மணம் புரிந்து கொண்ட வைபவமும், அதன் பிறகு அவருக்கு நேர்ந்த அபூர்வமான கதியும், தமது மனையாட்டியான காந்திமதி யம்மாளும், அரிய புதல்வனான ராஜாபகதூரும் கடைசியாக அந்த இடத்திலிருந்து மாயமாய் மறைந்து போனதும், முடிவில் அந்த மாளிகை கிழவரது இளைய மனைவிக்குச் சொந்தமானதும், அவர்களிடத்திலிருந்து வேறொருவர் அதை வாங்கி அநுபவித்து வருவதும் ஆகிய விஷயங்கள் யாவும் அப்பொழுதே கண்முன் தோன்றும் நாடகக் காட்சிகள் போல அவரது அகக்கண்ணிற்குப் புலனாகவே, அவரது மனம் முழுதும் அந்த நினைவுகளில் ஆழ்ந்து லயித்துப் போயிற்று. அவரது தேகம் சித்திரப்பாவை போல் அசைவற்று அப்படியே ஒய்ந்து காணப்பட்டது. சென்று போன நாட்களும், கழிந்துபோன காட்சிகளும், கடவுளால் அளிக்கப்பட்டுப் பிறகு பறிக்கப்பட்டுப் போன வைபவங்களும் மறுபடி திரும்பப் போகின்றனவாயென்றும், தமது மனிதர்களெல் லோரும் ஒன்று கூடி மறுபடியும் முன்போல வாழப் போகிறார் களாவென்றும் திவான் சாமியார் நினைத்து நினைத்து மனநைவடைந்து உருகி ஒய்ந்து அப்படியே சிறிது நேரம் உட்கார்ந்திருக்க, ஏதோ அலுவலாய் வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் நுழைந்த அந்த வீட்டின் ஸ்திரீ யாரோ பரதேசி திண்ணையில் உட்கார்ந்திருந்ததாக உணர்ந்து ஒரு பக்கமாக விலகி நடந்தபடி தனது கடைக்கண் பார்வையால் அவரைக் கவனித்தாள். கவனிக்கவே, சமீப காலத்தில் வந்துவிட்டுப் போன சாமியாரே மறுபடியும் வந்திருப்பதாக அந்த ஸ்திரி உடனே உணர்ந்து கொண்டாள். உணர்ந்தவுடன், அதற்குமுன் பழகிய பிரியமான