பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 செளந்தர கோகிலம்

பன்முறை கும்பிடுகள் போட்டு, அவரால் வைக்கப் பட்ட நோட்டுகளை எடுத்துக் கொண்டான்.

திவான் சாமியார் : காத்தான்! நீ நல்ல யோக்கியமான மனிதன். உன்னுடைய மனசு தங்கமான மனசு, அதைக் கருதி உனக்கு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்காக நான் கணக்குப் பார்க்காமல் கொடுத்தேனேயன்றி, உன் சரக்கின் யோக்கியதையை மாத்திரம் கவனித்து நான் இதைக் கொடுக்கவில்லை. நீ இப்பேர்ப்பட்ட மனிதனென்று இப்போது ஐந்து நிமிஷ நேரம் உன்னோட பழகியவுடனே நான் கண்டுபிடித்துவிடவில்லை. நான் முன்னே சொன்னபடி என்னு டைய சிநேகிதர் சொல்லக்கேட்டே, உன் யோக்யதையைத் தெரிந்து கொண்டேன். அவர்கூட இந்த ஊரில் இருந்த ஒரு பெரிய மனிதர்தான்.

காத்தான் : இந்த நாயெப்பத்தி அம்பிட்டுத் தூரம் பெருமையாச் சொன்ன அந்த மவராசரு யாரு சாமி அவுங்க இப்பவும் இந்த ஊருலேதானே இருக்கறாங்க?

திவான் சாமியார் : அவர் இருந்தால், இப்போது என்னோட வந்திருக்கமாட்டாரா? அவர் மறைந்துபோய் இரண்டு வருஷ காலமாகிறது. அவரை இப்போது நீ சுத்தமாக மறந்து போயிருப்பாய்.

காத்தான் : அவுங்க எந்த ஊருலே எறந்து போனது சாமீ! இந்த ஊருலேதானே?

திவான் சாமியார் : ஆமாம்.

காத்தான் : அப்படியானால், கடைசி நெருப்பு எங்கையா லெதானே அவுருக்குக் கெடச்சிருக்கும். நானு ஊராருக்கெல்லாம் புள்ளையில்லையா சாமீ. பாப்பரு மொதக்கொண்டு பதினெட்டு சாதியாருக்கும் நெசமான கொள்ளிப் போட்டுக் கொளுத்தற புள்ளெ நாந்தானே சாமி! நானு யாருன்னு ஒங்களுக்குத் தெரியுமா சாமீ! நானு மோச்சலோவத்து வாசப்படி காக்கர தொவார பாலகன் சாமீ. மனிசரெச் சுட்டு அவங்களோடே அசங்கியம் புடிச்ச ஒடம்பெயெல்லாம் கொளுத்திச் சாம்பலாக்கி, அவங்களோடெ பாவத்தையெல்லாம் போக்கடிச்சு, அவுங்க