பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iS4 செளந்தர கோகிலம்

இவரிடம் கேட்டுக் கொண்டேன். இவர் தமக்கு அப்போது ஜமாடந்தி காலமாகையால், ஒரு நிமிஷங்கூட ஒழிவு கிடைக்க வில்லையென்று சொல்லி, “ஏன் நீங்கள் தான் திடமாயிருக் கிறீர்களே இதற்குள் உயிலுக்கென்ன அவசரம் வந்துவிட்டது. நீங்கள் இன்னும் இருபது வருஷகாலம் கல்போல இருக்கப் போகிறீர்கள். உங்களுக்கு இராமன் லக்ஷ்மணன்போல இரண்டு குழந்தைகள் பிறக்கப் போகிறார்கள். நீங்கள் உயில் எழுத வேண்டிய அவசியமே இல்லாமற் போய்விடப் போகிறது. ஏன் நீங்கள் இப்போதே அதைப்பற்றி நினைக்கிறீர்கள்” என்றார். நான் ஐயரே! இதெல்லாம் வீண் ஸ்தோத்திர மொழிகள். யாருடைய ஆயுசு யாருக்குத் தெரியும். இந்த நிமிஷம் இருந்தவர் அடுத்த நிமிஷத்தில் இல்லை. நீர் சொல்லுகிறபடி ஈசுவரன் அனுக்கிரகித்தால் எனக்கும் சந்தோஷந்தான். இருந்தாலும் அப்படித்தான் நடக்குமென்ற நிச்சயத்தை நாம் வைத்துக் கொண்டு அஜாக்கிரதையாக இருப்பது சரியல்ல. எல்லாவற் றிற்கும் நீர் இந்த உயிலை உம்முடைய ஜமாபந்தி முடிந்த பிறகாவது தயாரித்துக் கொண்டு வாரும்” என்றேன். இவர் “சரி அதற்கென்ன ஆகட்டும். நான் எப்போதும் உங்களுடைய மனுஷ்யன். உங்கள் பிரியப்படி நடந்து கொள்ளக் காத்திருக்கி றேன்’ என்று சொல்லிவிட்டு என்னிடம் செலவு பெற்றுக் கொண்டார். அதற்கு மறுநாள் வருஷப் பிறப்பு தினம். ஆகையால், நான் உடனே என் கைப் பெட்டியைத் திறந்து ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து இவரிடம் கொடுத்து, இது வருஷப் பிறப்புச் சன்மானமாக இருக்கட்டுமென்று சொல்வி ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைத்தேன். அதன் பிறகு நான் இதுவரையில் இவரைப் பார்க்கவுமில்லை. இவர் உயில் தயாரித்தாரோ இல்லையோ என்பதும் எனக்குத் தெரியாது” என்றார்.

அந்த வரலாற்றைக் கேட்ட கலெக்டர் மிகுந்த களிப்பும் குதுரகலமும் அடைந்தவராய் கிராம முன்சீப்பின் முகத்தைப் பார்த்தார். குஞ்சிதயாத முதலியார் கர்ணத்தின் குடும்ப வரலாறு களையெல்லாம் கூறியது நிஜமே என்று ஒப்புக் கொள்ளுகிறவர் போல மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் தோற்றுவித்த முகத்தினராய் கிராம முன்சீப்பும் கலெக்டரைப் பார்த்தார். உடனே கலெக்டர் கிராம முன்சீப்பை, பக்கத்திலிருந்த வேறோர் அறைக்குள்