பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22C) செளந்தர கோகிலம்

கோகிலாம்பாள் காணப்படவில்லையென்றும் யூகித்துக்கொண்டு துடிதுடித்துப் போய் அக்கினித் தணல்களின் மேல் நிற்போரைப் போல் சகிக்க இயலாத வேதனையில் பட்டு மெய்ம்மறந்து போய், விஷயம் இன்னதென்பதை அறிந்துகொள்ள வேண்டு மென்ற தமது பேராவலை அடக்கவும் மாட்டாமல், பூஞ்சோலை யம்மாளை வருத்தவும் மனமற்று இருதலைக் கொள்ளி எறும்பு போல் நின்று விட்டனர்.

தங்களது எஜமானியம்மாளது பரம துக்ககரமான நிலை மையைக் காணச் சகியாதவராய் அவர்கள் மனமார்ந்த அநுதாப மும், இரக்கமும், துக்கமும், சஞ்சலமும் கொண்டு உருகித் தவித்து நின்றனர்.

செளந்தரவல்லியோ வெளிப்பார்வைக்கு மாத்திரம் மற்றவர் களைக் காட்டிலும் அதிக விசனமடைந்தவள் போல நடித்தாள். ஆனாலும், தனது தாய் கண்ணபிரானது கடிதத்திற்கு இணங்கிக் கோகிலாம்பாளைத் தனிமையில் அனுப்பியது பெருத்த குற்றத் திற்கு அந்தத் தண்டனை தனது தாய்க்குப் போதியதல்ல வென்று நினைத்து, தான் ஏற்கெனவே தீர்மானித்திருந்தபடி தனது தாயை யும் அக்காளையும் எல்லோருக்கு முன்னாலும் அவமானப்படுத் தியே தீரவேண்டுமென்ற முடிவை முன்னிலும் அதிக உறுதியாக செய்துகொண்டு தனது தாயண்டை நெருங்கிப்போய் நின்று, ‘அம்மா! அம்மா! ஏனம்மா ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? அக்காள் எங்கே? இன்று காலை முதல் நான் என் காரியங்களைக் கவனித்துக் கொண்டு என் விடுதியில் இருந்தேன். இன்று காலையில் அக்காள் தனிமையில் புறப்பட்டு எங்கேயோ போன தாகவும், அவளைத் தேடிக்கொண்டு நீங்களும் மத்தியானம் 4-மணிக்குப் புறப்பட்டுப் போனதாகவும் வேலைக்காரர்கள் சொன்னார்கள். அதைக் கேட்க என் மனம் தவித்துப் போய் விட்டது. நீங்கள் தேடிக்கொண்டு போனதிலிருந்து, அக்காளுக்கு ஏதாவது அபாயம் நேர்ந்திருக்குமோ என்ற கவலை உண்டாகி விட்டது. நீங்களும் இந்நேரம் திரும்பி வராதிருந்தது எங்கள் எல்லோருக்கும் வேதனையாக இருந்தது. நீங்கள் மாத்திரம் இப்போது தனியாக வந்ததைப் பார்க்க எங்களுடைய வேதனை அதிகப்படுகிறது. உங்களோடு அக்காள் ஏன் வரவில்லை?” என்று நயமாகவும் பணிவாகவும் கூறினாள். .