பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 267

அவளது சொற்கள் கோகிலாம்பாளின் மனத்தை வாள்களால் அறுப்பது போலிருந்தன. சகிக்கவொண்ணாத வெட்கமும் அவமானமும் அடைந்து கோகிலாம்பாள் தலை குனிந்து குன்றி நின்றாள். செளந்தரவல்லி அவ்வாறு கோகிலாம்பாளை இழிவு படுத்திப் பேசியதைக் கண்டு பொறாத பூஞ்சோலையம்மாள் செளந்தரவல்லியை அடக்கித் தணிவான குரலில், “என்ன, செளந்தரா கொஞ்சம்கூட முன்பின் யோசிக்காமல் வார்த்தை களைக் கொட்டுகிறாயே! நீ இப்படிப் பேசினால், இத்தனை ஜனங்களுக்கும் முன்னால் அக்காளை அவமானப்படுத்துகிற மாதிரியல்லவா! அதுவுமன்றி, அதோ வந்திருப்பது உன்னைக் கட்டிக்கொள்ளப் போகும் ஐயாவல்லவா! அவர்களுக்கெதிரில் நீ வாயைத் திறக்கலாமா அல்லது அவர்களுக்கு நேரில்தான் வரலாமா! அப்பால் போய் மறைவாக இரம்மா’ என்று அவளுக்கு மாத்திரம் கேட்கும்படியாக மொழிந்துவிட்டு, சுந்தரமூர்த்தி முதலியாரைப் பார்த்து உரத்த குரலில் பேசத் தொடங்கி, “நீங்கள் சொல்வதைப் பார்த்தால், கோகிலா ஏதோ அபாயத்திலிருந்து கடவுள் செயலால் தப்பி வந்ததாகத் தெரிகிறது. நாங்களும் அதே சங்கதியைத்தான் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தோம். கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி முக்குறுணியாகுமா என்று பழமொழி சொல்வார்கள். குழந்தை செளக்கியமாக வீடு வந்து சேர்ந்தாள். அவ்வளவோடு நாம் சந்தோஷப்பட்டு இந்த விஷயத்தை இதோடு நிறுத்துவோம். நம்முடைய சொந்த ஜனங்களெல்லோரும் இந்த இரவு வேளையில் இப்படிப்பட்ட தொந்தரவுக்கு ஆளானதுதான் என் மனசை வருத்துகிறது. எல்லோரும் போஜனம் செய்தார்களோ என்னவோ தெரியவில்லை. நான் உள்ளே போய் இலை போடச் சொல்லுகிறேன். எல்லோரும் போஜனும் செய்து இன்றிரவு இங்கேயே படுத்திருந்து காலையில் போகலாம். எல்லோரும் தயவு செய்து இங்கேயே இருக்க வேண்டும்” என்று நிரம்பவும் நயமாகவும் பணிவாகவும் கூறினாள்.

அதைக் கேட்டவுடனே அங்கிருந்த ஜனங்களுள் பலர், ‘நாள்கள் சாப்பிட்டாய்விட்டது. எங்களுக்குப் போஜனம் தேவையில்லை. நாங்கள் படுக்கைக்கு வீட்டுக்கே போகிறோம். எப்படியாவது கோகிலா செளக்கியமாக வந்து சேர்ந்தாளே!