பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 செளந்தர கோகிலம்

அதுவே பெருத்த விருந்து சாப்பிட்ட மாதிரி” என்று ஒரே காலத்தில் கூறினர். சிலர் “எங்கள் வீட்டில் சாப்பாடெல்லாம் செய்து தயாராய் வைக்கப்பட்டிருக்கிறது. சாப்பிட உட்காரப் போன சமயத்தில், இந்தச் செய்தியைக் கேட்டு உடனே புறப்பட்டு ஒடி வந்தோம். நாங்கள் வீட்டுக்கே போய்ச் சாப்பிடுகிறோம். இல்லாவிட்டால், அங்கே தயார் செய்திருப்பதெல்லாம் வீணாய்த்தானே போகும். அதுவுமல்லாமல் இங்கே திடீரென்று இந்த இரவில் இத்தனை பேருக்கும் சாப்பாடு போடுவதென்றால், அதுவும் உங்களுக்கு அசெளகரியமாக இருக்கும். வேண்டாம். நாங்கள் வீட்டுக்கே போகிறோம். எங்களுக்கும் நேரமாகிறது. குழந்தை கோகிலா எங்கெங்கோ போய் அலைந்து கஷ்டப்பட்டு வந்திருக்கிறது. மற்றவர்களும் இன்னம் சாப்பிடவில்லை போலிருக்கிறது. ஆகையால் நீங்கள் போய் உங்கள் காரியத்தைப் பாருங்கள். நாங்கள் உத்தரவு வாங்கிக் கொள்கிறோம்’ என்றனர்.

கோகிலாம்பாளுக்கு என்னவிதமான அபாயம் நேரிட்ட தென்பதைத் தெரிந்து கொள்ளாமல், அவ்விடத்தை விட்டுப் போகச் சிலருக்கு மனமில்லை. ஆதலால், அவர்கள் சுந்தரமூர்த்தி முதலியாரிடம் நெருங்கிப் போய், “கோகிலா ஏதோ பெரிய அபாயத்திலிருந்து தப்பியதாகச் சொன்னீர்களே; அது என்ன சங்கதி? அதைக் கேட்டுத் தெரிந்து கொண்டால்தான், மனம் நிம்மதியடையும் போலிருக்கிறது” என்றனர். மற்றவர்களும் அதைத் தெரிந்துகொள்ளப் பிரியப்பட்டனர். ஆனாலும், அது பூஞ்சோலையம்மாளுக்கு இஷ்டமில்லையென்று உணர்ந்து பேசாமல் இருந்தனர். ஆனால் சிலர் அதைப்பற்றி சுந்தரமூர்த்தி முதலியாரைக் கேட்கவே, அவர்களும் அவரது வாயைப் பார்த்தபடி நின்றனர். அந்தக் குறிப்பை அறிந்த சுந்தரமூர்த்தி முதலியார் விஷயத்தை வெளியிட மனமற்றவர் போலவும், அவர்களது வற்புறுத்தலைத் தடுக்கமாட்டாமல் அரை மனதோடு அதை வெளியிடுகிறவர் போலவும் நடித்து, ‘இன்று காலை முதல் பெண்ணைக் காணாமையால் இந்த வீட்டு எஜமானி யம்மாளும் மற்றவர்களும் நிரம்பவும் அல்லலும் மனவேதனையும் பட்டு, போஜனத்தைக்கூட அலட்சியம் செய்து தவித்திருந்திருக் கிறார்கள். இந்தச் சமயத்தில் நான் பயங்கரமான வரலாற்றை