பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 269

யெல்லாம் சொல்லி, அவர்களுடைய அவஸ்தையை அதிகப் படுத்துவது உசிதமாகப்படவில்லை. நேற்று முதல் இவ்விடத் திலேயே இருக்கும் என் தங்கைக்கு நான் டெலிபோன் மூலமாக இந்தச் சங்கதியைத் தெரிவித்தேன். அவள் அதை இங்கிருந்த எல்லோருக்கும் சொல்லி இருப்பாளென்று நினைத்து, நான் இப்போது இந்தப் பிரஸ்தாபத்தை எடுத்துவிட்டேன். இல்லா விட்டால் நான் இதைக் குறித்துப் பேசியே இருக்கமாட்டேன்” எனறாா.

உடனே புஷ்பாவதி நாணிக்கோணி நாகணவாய்ப் புள் மழலையாகப் பேசுவதுபோல மிருதுவாகப் பேசத் தொடங்கி, ‘இல்லையண்ணா நீங்கள் டெலிபோனில் அந்தச் சங்கதியைச் சொன்னீர்களல்லவா, அதைக் கேட்டவுடன் எனக்கும் குலை நடுக்கம் எடுத்துக் கொண்டது. கைகால்களெல்லாம் கட்டிலடங் காமல் உதற ஆரம்பித்தன. மூளையும் சுழல ஆரம்பித்தது. என்னால் நிற்க முடியாமல் போய்விட்டது. பெரியம்மாளும் அப்போது இங்கே இல்லை, செளந்தரவல்லி தூங்கிக்கொண் டிருந்தது. நான் என் உடம்பின் ஸ்திதியை ஒரு வேலைக்காரி யிடத்தில் சொல்லிவிட்டு, என்னை எழுப்ப வேண்டாமென்று கேட்டுக்கொண்டு போய்ப் படுத்தவள் இப்போதுதான் கொஞ்சம் தெளிவடைந்து எழுந்து வருகிறேன்” என்றாள். அதைக் கேட்ட உடனே அருகிலிருந்த ஜனங்களெல்லோருக்கும், அந்த அபாயம் இன்னதென்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் துடிப்பும் அபாரமாகப் பெருகின. பூஞ்சோலையம்மாளுக்கும் அதை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் ஒரு புறத்தில் எழுந்தது. ஆனாலும், தமது ஜனங்களெல்லோரையும் அனுப்பி விட்டுத் தனிமையில் அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டு மென எண்ணினாள்; ஆனால் ஜனங்களை எப்படிப் போகச் சொல்வது என்பதையறியாது தவிக்கலானாள். கோகிலாம்பாளது நிலைமையோ பரமவேதனையானதாக இருந்தது. தனக்கு எவ்வித அபாயமும் நேரவில்லையென்று தான் சிறிது நேரத்திற்கு முன்பு செளந்தரவல்லியிடம் கூறியது பொய்யாகப் போய் விட்டதேயென்றும், அத்தனை ஜனங்களும் தன்னைப்பற்றி எவ்விதமான கேவல அபிப்பிராயம் கொண்டு வெளியில் போய்த் துற்றுவார்களோ என்றும் எண்ணி, பெருத்த கலக்கமும் அச்சமும்