பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 செளந்தர கோகிலம்

வீராவேசமும் மனக்கொதிப்பும் காட்டி, “ஆமாடா! பெட்டி வண்டி அதுதானடா!’ என்று கூறி ஆர்ப்பரித்த வண்ணம் குதிரைக்கு இன்னம் இரண்டு மூன்று அடிகள் கொடுத்துத் தமது பீட்டனை நிரம்பவும் விசையாக ஒட்டி வண்டிகள் இருந்த இடத்தண்டை நெருங்கினார். பீட்டன் வண்டியிலிருந்த மூவரது அங்கங்களும் மனமும் பதறிப் பறந்தன. பெட்டி வண்டிக்குள் கோகிலாம்பாள் இருக்கிறாளோவென்று மூவரும் உற்று நோக்கினர். அதற்குள் யாரும் இருந்ததாகத் தோன்றவில்லை. அதற்குச் சமீபத்திலும் வேறு மனிதர் காணப்படவில்லை. உடனே சுந்தமூர்த்தி முதலியார், “என்னடா மினியா வண்டி காலியாக இருக்கிறதே! மனிதரே காணப்படவில்லையே!” என்றார். உடனே மினியன், “ஆமாஞ் சாமி வண்டியிலெ இருந்தவங்க எங்கனே போனாங்களோ தெரியவியே?’ என்று ஆத்திரத்தோடு மறுமொழி கூறினான்.

உடனே இளைய ஜெமீந்தார், “இந்தப் பீட்டன் வண்டியில் வந்தவர்கள் ஒருவேளை பெண்ணைப் பலாத்காரமாய்க் கட்டித் தூக்கிக் கொண்டு, பக்கத்தில் தாழைப் புதருக்கப்பாலுள்ள மணல் பரப்புக்குக் கொண்டுபோய் ஏதாவது உடத்திரவம் செய்கிறார்களோ என்னவோ தெரியவில்லையே!” என்றார்.

அவ்வாறு அவர்கள் சம்பாஷித்த சமயத்தில் “ஐயோ! ஐயோ! அக்கிரமம் செய்கிறார்களே! இதைத் தடுக்க இங்கே யாரும் இல்லையா’ என்று கோகிலாம்பாள் நிரம்பவும் பயங்கரமாகக் கூச்சலிட்ட ஓசை உண்டாகவே, அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி முதலியாரும், மினியனும், வேலைக்காரனும் சடக்கென்று வண்டியை விட்டுக் கீழே குதித்தார்கள். அந்த ஒரு நொடியில் அவர்களது தேகங்கள் பறந்து போயின. அவர்கள் முற்றிலும் மெய்ம்மறந்து வீராவேசங்கொண்டு எந்தத் திக்கிலிருந்து ஒசை உண்டாயிற்றோ அந்தத் திசையில் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஒடத் தலைப்பட்டனர். சுந்தரமூர்த்தி முதலியார் தமது பீட்டன் வண்டியை விட்டுக் குதித்துமுன், எப்போதும் அவர் தமது பாது காப்பிற்காக வைத்திருந்த ஏழு குழாய்ப் பிஸ்டல் என்ற சிறிய கைத் துப்பாக்கியை எடுத்துத் தமது கையில் வைத்துக்கொண்டு முன்னால் பாய்ந்து ஓடினார். அவர் முன்னும் மற்றவர்