பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தர கோகிலம்

11-வது அதிகாரம் தொடர்ச்சி

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை

திருவிடமருதுாருக்குப் போய்த் தமது மனிதரைக் காண எத்தனித்தது தம்மை வெட்டக் கொண்டு போவதுபோல அவரால் சகிக்க இயலாத வேதனையான செய்கையாய் இருந்தது. ஆயினும் தாம் முக்கியமான ஒரு விஷயத்தில் உண்மை இன்னது என்று அறிந்து கொள்வதைக் கருதி நிரபராதிகளான தகப்பனார், ராஜாபகதூர் முதலியோரது மனத்தைப் புண்படுத்தி மூன்று மாதகாலமாய் துயரக்கடலில் ஆழ்த்திக்கொண்டிருப்பதால், தாம் தமது மன உணர்ச்சிகளை எவ்விதமாகிலும் அடக்கிக்கொண்டு, உண்மையை உடனே கண்டுபிடிப்பது அத்தியாவசியமான காரியம் என்று தீர்மானித்துக் கொண்ட திவான் சாமியார் அரும்பாடுபட்டுத் தமது மனத்தைச் சாந்தப் படுத்திக்கொண்டு ஒருநாள் காலைவேளையில் திருவிடமருதூரை அடைந்தார். அடைந்தவர் அந்த ஊர்க் குளத்திற்குப் போய் நீராடித் தமது நியமம் நிஷ்டைகளை முடித்துக் கோயிலுக்குப் போய் அர்ச்சனை தீபாராதனை முதலியவற்றை நிறைவேற்றி மிகுந்த பக்திப் பெருக்கோடு சுவாமி தரிசனம் செய்துகொண்டபின் ஊருக்குள்ளிருந்த ஒரு போஜன சாலையை அடைந்து தமது ஆகாரத்தை ஒருவாறு முடித்தபிறகு தமது மாளிகை இருந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார். அவ்வாறு போனபோதே அவரது மனம் பொங்கியெழுந்து கட்டிலடங்காமல் பதறித் துடிக்க ஆரம்பித்தது. இன்பப் பெருக்கோ துன்பப் பெருக்கோ என்பதே தெரியாதபடி பலவித உணர்ச்சிகள் ஒரே காலத்தில் ஒன்றுகூடி அவரது மனத்தை அமர்க்களப்படுத்த ஆரம்பித்தன. தமது தந்தையைத் தாம் காணப்போகிறோம் என்ற ஆநந்தம் ஒருபுறம் எழுந்தது. ஆனாலும் அவர் எவ்விதமான நிலைமையில் காணப்படுகிறாரோ என்ற அச்சம் ஒரு புறத்தில் தோன்றி அபாரமான கவலையை உண்டாக்கியது. தமது மனையாளான