பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - செளந்தர கோகிலம்

இருந்தது. ஆனால் தான் மற்றவர்களிடம் அதைப்பற்றி எதிர்வாதமாடுவது அநாவசியமான வேலையென்று அவள் எண்ணியதன்றி, தான் மற்றவரது மனம் கோணாதபடி அந்த விவாதத்தைத் தடுத்துவிட வேண்டுமென்ற நினைவோடு அந்தப் பெண்மணி மிருதுவான குரலில் பணிவாகவும் அடக்கமாகவும் பேசத் தொடங்கி, “இப்போது எங்களுடைய எண்ணமெல்லாம் சீர்குலைந்து போயிருப்பது தங்களுக்குத் தெரியாததல்ல. எங்களுடைய மனசெல்லாம் தாமரை இலைத் தண்ணீர் போலத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் நாம் கலியான விஷயத்தைப் பற்றிப் பேசுவது உசிதமல்ல. நமக்கு ஏற்பட்டுள்ள இடர்களெல்லாம் ஒரு விதமாக நீங்கட்டும். அதன் பிறகு கலியாணம் முதலிய சந்தோஷ விஷயங்களைப்பற்றி யோசித்துக் கொள்ளலாம். தாங்களும், தங்கள் தங்கைச்சியாரும் அதிக தூரத்தில் இல்லை; கிட்டேதானே இருக்கிறீர்கள். உங்களுடன் கலந்து யோசிக்காமலா மறுபடி கலியாணக் காரியம் எல்லாம் நடக்கப் போகிறது. அதையெல்லாம் பிறகு நாம் சாவதானமாய்ப் பேசிக்கொள்ளலாம். இப்போது அதற்கு அவசரம் ஒன்றுமில்லை’ என்று நிரம்பவும் விநயமாகவும் பணிவாகவும் கூறினாள்.

அவள் தந்திரமாகவும் தமக்கு இடங்கொடுக்காமலும் மறுமொழி கூறித் தப்பித்துக்கொள்ள நினைக்கிறாள் என்பதை எளிதில் உணர்ந்துகொண்ட சுந்தரமூர்த்தி முதலியார், “என்ன கோகிலம்: கலியான விஷயம் ஆயுசு கால பரியந்தம். நம்முடைய rேம லாபங்களையும், சந்தோஷ வாழ்க்கையையும், நாம் அடைய எண்ணும் இன்பத்தையும், நமது பெருமைப் பாட்டையும், கண்ணியத்தையும் பாதிக்கக்கூடிய ஜீவாதாரமான விஷயம். நானோ இந்த உலகத்தில் உன்னையன்றி வேறே எவளையும் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லையென்ற தீர்மானத்துக்கு இப்போது வந்துவிட்டேன். உன் தாயாரும் நீயும் கண்ணபிரான் முதலியாரை நீ கட்டிக்கொள்வதென்று ஏற்கனவே முடிவாகிவிட்டது பற்றி என்னைக் கட்டிக்கொள்ள இயலவில்லையென்றும், அந்த ஏற்பாடு நடந்திராவிட்டால், என்னை நீ கட்டிக்கொள்ள ஆக்ஷேபணை இராதென்றும்