பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 63

இடம் எதையாவது பார்த்து அங்கே பெண் கேட்டால் உன் கதி என்ன ஆகிறது?

கோகிலாம் பாள் : அப்படி அவர்களுடைய மனம் மாறுமென்று நான் நினைக்கவே மாட்டேன். அப்படியே தெய்வ சங்கற்பத்தால் அவர்கள் வேறே யாரையாவது கலியாணம் செய்துகொண்டாலும், நான் என்ன செய்கிறது? இப்போது ஒரு புருஷரை ஒரு பெண் சடங்குப்படி கட்டிக்கொள்ளுகிறாள். கொஞ்ச காலத்தில் புருஷர் அவளைத் தள்ளிவிட்டு வேறே ஒருத்தியைப் பிடித்துக்கொள்ளுகிறார். அப்போது அந்தப்பெண் என்ன செய்வாள்? அவள் வாழாவெட்டியாய்த் தன் தாயார் வீட்டில் இருந்து இறப்பாளல்லவா. அதுபோலவே என் கதியும் முடியட்டும். அதுவே நியாயமான செய்கையன்றி, நான் வேறு விதமாக நடந்துகொள்வது முறையாகாது. நான் அவர்களைத் தேர்ந்தெடுத்ததிலிருந்து, நான் தங்களை இழிவுபடுத்துகிறதாகவா வது, தங்களிடம் அவர்களுக்குச் சமானமான யோக்கியதை இல்லையென்று எண்ணுகிறதாகவாவது நினைக்கவேண்டாம். ஏககாலத்தில் இந்த இரண்டு இடங்களைப்பற்றியும் கலியாணப் பிரஸ்தாபம் ஏற்பட்டிருந்து, நான் இந்த இடத்தைத் தள்ளி அந்த இடத்தை நாடி இருந்தால், தாங்கள் என்மேல் ஆத்திரப்பட ஒரு விதத்தில் ஏதுவுண்டு. அந்த இடத்தில் என்னைக் கொடுப்பதாக முடிவு ஆன பிறகே தங்களைப்பற்றிய பிரஸ்தாபம் வந்தது. ஆகையால், நாங்கள் ஏற்கனவே செய்த முடிவான ஏற்பாட்டை மாற்றக்கூடவில்லை. அதுவே தவிர, நாங்கள் அந்த இடம் உயர்வானது இந்த இடம் தாழ்வானது என்ற விஷயத்தை எண்ணவே இல்லை. தங்களுடைய கண்ணியத்தைப் பாதிக்கக் கூடிய அபிப்பிராயம் ஏதாவது நாங்கள் கொண்டிருந்தால், என் தங்கையைத் தங்களுக்குக் கட்டிக்கொடுக்கவும் நாங்கள் இணங்கி இருக்க மாட்டோம் அல்லவா. அதைத் தாங்கள் ஆழ்ந்து யோசித்துப் பார்க்கவேண்டும். அதுவுமன்றி இந்த விஷயத்தில் முக்கியமான வேறொரு இடைஞ்சலும் இருக்கிறது. அதையும் தாங்கள் கவனிக்கவேண்டும். என்னுடைய தங்கை எப்போது தங்களைப் பார்த்தாளோ அதுமுதல் அவள் தங்களையே கட்டிக்கொள்ளவேண்டுமென்று ஒரே பிடிவாதமாக