பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 செளந்தர கோகிலம்

கண்ணபிரான் முதலியார் சிறைச்சாலையில் இருக்கிறார். நான் விசாரித்துப் பார்த்த வரையில், அவர் நற்குண நல்லொழுக்கம் உடையவரென்றும், திருட்டுபுரட்டு முதலிய கெட்ட விஷயங்களில் இறங்கக்கூடியவர் அன்றென்றும் தெரிந்து கொண்டேன். ஆகையால், இந்தச் சந்தர்ப்பத்தில் நாமெல்லோரும் நமது கவனத்தையும் பொழுதையும் முற்றிலும் அந்த விஷயத்தில் செலவிட்டு அவர் தண்டனை அடையாமல் அவரைத் தப்ப வைக்க வேண்டும். அதுவே நாம் இப்போது செய்யத்தக்க முதல் காரியம். இந்தச் சமயத்தில் நாம் இந்தக் கலியாணத்தை நடத்தினால், அது பார்ப்பவர் பழிக்கவும் தூவித்துப் பேசவும் இடங்கொடுக்கும். நம்முடைய மனசுக்கும் அது அவ்வளவாக சந்தோஷமாய் இருக்காது. சந்தோஷமும் ஆநந்தமும் இல்லாமல் செய்வது கலியாணமே ஆகாது. நான் உன்னோடு பேசவேண்டும் என்று எப்படி ஆவல்கொண்டு துடித்திருந்தேனோ, அதுபோல, உன் தங்கையைக் கட்டிக்கொண்டு அவளுடன் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்ற ஆவலின் மிகுதியினால் என் மனம் எவ்வளவோ துடிக்கிறது. ஆனாலும், சந்தர்ப்பத்தைக் கருதி அதையெல்லாம் நான் இப்போது அடக்கிக் கொண்டிருப்பதே நான் இப்போது செய்யத்தக்க காரியம். நீங்கள் கண்ணபிரான் முதலியார் விஷயத்தில் துயரமடைந்து தவிக்கிறீர்களென்பது என் மனசில் மாத்திரம் உறைக்கவில்லையா? அதை நான் நன்றாக உணருகிறேன். அதுவுமன்றி, அவருடைய விஷயத்தில் என் மனசிலேயே ஒருவிதமான பிரியமும், கவர்ச்சியும், பாசமும் ஏற்பட்டுப்போனது. ஆகையால், அதைக் கருதியும் நான் இப்போது இந்தக் கலியான சந்தோஷத்தை அடைய என் மனம் இடந்தரவில்லை. அவரும் நானும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே கலியாணப் பந்தலில் ஒரே முகூர்த்தத்தில் உங்கள் இருவரையும் கட்டிக்கொண்டால்தான், என் மனம் உண்மையில் ஆநந்தமடை யும் அவருடைய வழக்கு வெகு சீக்கிரத்தில் ஒருமாதிரியாக முடிந்துவிடுமென்று நினைக்கிறேன். நாம் ஐயாயிரம் பதினாயிரம் செலவிட்டுப் பெரிய பாரிஸ்டர் துரைகளை அமர்த்தி அவரை விடுவித்து அழைத்துவந்து, அடுத்த முகூர்த்தத்தில் நாம் கலியாணங்களை முடித்துவிடுவோம். அவர் களங்கமில்லாமல் திரும்பிவந்தால்கூட ஜனங்கள் தமக்குள்