பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 செளந்தர கோகிலம்

டெண்ட் கலெக்டர் உத்தியோகத்தில் இருப்பவர். ஆதலால், அவரைக் கருதி வெள்ளைக்கார துரைமாரும் துரைசாணிகளும், போலீஸ் கமிஷனர் ஜில்லா கலெக்டர், கவர்னருடைய காரிய தரிசி, பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டுகள், போலீஸ் இன்ஸ்பெக் டர்கள், டிப்டி சூபரின்டென்டெண்டுகள் முதலியோரும் வந்து போகத் தொடங்கினர். முதல் நாள் புஷ்பாவதியும், செளந்தர வல்லியும் மங்கள ஸ்நானம் செய்து அற்புதமாக அலங்கரித்துக் கொண்டு முத்துப் பந்தல்களின் கீழ் அமர்ந்து கொண்டனர். ஆயிரக்கணக்கில் சீமாட்டிகள் வந்திருந்தனர். ஆனாலும், வைரக் கம்மல்கள் அணிந்து கொண்டிருந்தவர்களான சுமார் நூறு சீமாட்டிகளே அவர்களிடம் நெருங்கி நலங்கு ஊஞ்சல் லாலி முதலிய சுபகாரியங்களை நடத்த அநுமதிக்கப்பட்டனர். பூஞ்சோலையம்மாளும் அந்தக் கும்பலில் காணப்பட்டாள். ஆனாலும், அந்த அம்மாள் தனது மூத்த குமாரியும் ஒன்றாகச் சேர்ந்து அத்தகைய வைபவங்களை அடையவில்லையே என்ற விசனத்தில் ஆழ்ந்தவளாய் ஒரு மூலையில் மறைவாக உட்கார்ந் திருந்தாள். ஊஞ்சலும், ஸ்திரீகளின் விளையாடல்களும், நாகசுரக் கச்சேரிகளும், போட்டி சங்கீதங்களும், கேளிக்கைக் கச்சேரிகளும், பலவகைப்பட்ட சங்கீத கச்சேரிகளும் அன்றைய இரவில் வெகு நேரம் வரையில் மகா வசீகரமாகவும் அமோக மாகவும் நடந்தேறின. எல்லோருக்கும் சந்தனம், நிச்சய தாம்பூலம் முதலியவை வெகு ஆடம்பரமாக வழங்கப்பட்டன. அவ்வள வோடு நிறுத்தி எல்லோரும் நித்திரையில் ஆழ்ந்தனர். நிச்சயதார்த்த கலியாணம் இனிது நிறைவேறியது. எல்லோரும் விருந்துண்டு, சங்கீத சாகரத்தில் மிதந்து, மெய் மறந்து இன்பகரமான துயிலில் ஆழ்ந்து போயினர். ஆனாலும், சுந்தரமூர்த்தி முதலியார், செளந்தரவல்லி, புஷ்பாவதி, அவளுக்கு வரிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளையான அழகிய மணவாள முதலியார் ஆகிய நால்வர் மாத்திரம் சகிக்கவொண்ணாததும் கட்டுக் கடங்காததுமான இன்பகரமான மனவெழுச்சியும் பூரிப்பும் அடைந்து பசி, தாகம், களைப்பு முதலிய உணர்ச்சியெதையும் பெறாமல், தாம் அதுவரையில் கண்டு அநுபவிக்காத புதிய சுவர்க்க போகத்தை அடையப் போகிறோம் என்று எதிர்பார்த்து ஆவலே மயமாய் நிறைந்து வெகு பாடுபட்டுத் தமது பொழுதைப் போக்கிக்