பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 2O7

புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் : தெரியும்; அவர், கெட்டுப் போய் ரோகியாயிருந்த ஒரு தாசியை வைத்திருந்தார். அவருக்குக் குஷ்டரோகம் வந்துவிட்டது. கை கால்களெல்லாம் குறைந்து போய்விட்டன. உடம்பு முழுதும் அழுகிப் பொத்து வடியத் தொடங்கியது. அவரை இவர் அந்த ஊரிலுள்ள குஷ்டரோக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டார். இப்போதும் அவர் அங்கே தான் இருக்கிறார். -

போலீஸ் கமிஷனர் : இவருடைய தாயார் எப்படி இருந்தார்கள்? -

புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் : இவருடைய தாயாருக்கு இரண்டு கண்களும் சுத்தமாய் அவிந்து போய்விட்டன. அந்த நிலைமையில், இவர் எப்படியோ தந்திரம் செய்து, எதிர்த்த வீட்டு துரைக்கண்ணு முதலியாருடைய மகளான இதோ நிற்கும் பெண்ணைக் கெடுத்து விட்டார் போலிருக்கிறது. ஒரு நாள் இவர் இவருடைய தங்கையையும், இந்தப் பெண்ணையும் எவருக்கும் தெரியாமல் அழைத்துக் கொண்டு அந்த ஊரைவிட்டு ஓடிவந்துவிட்டார். இவருடைய அந்தகத் தாயாரை அநாதையாக அவ்விடத்திலேயே இவர் விட்டுவிட்டார். அந்த அம்மாள் நிரம்பவும் கஷ்டப்பட்டு யாரையோ துணைக்கு அழைத்துக் கொண்டு தன் உடன் பிறந்தான் வீட்டுக்குப் போய்விட்டாள்.

போலிஸ் கமிஷனர் : இந்தப் பெண்ணுக்கு இதனுடைய தகப்பனார் வீட்டில் என்ன பெயர்?

புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் : இந்தப் பெண்ணின் நிஜமான பெயர் துளஸியம்மாள் என்றார்.

அவ்வாறு அவர்கள் சம்பாஷித்துக் கொண்டிருந்ததைக் கேட்கவே, அழகிய மணவாள முதலியார் உள்பட சகலமான ஜனங்களும் அப்படியே பிரமித்துப் போய் பேச்சு மூச்சின்றி அந்த விசாரணையை நிரம்பவும் சுவாரஸ்யமாக உற்றுக் கவனித்தபடி நின்றவிட்டனர். ஆனால் சுந்தரமூர்த்தி முதலியார் தமது மன தைரியத்தையும் துடுக்கையும் விடாமல் போலீஸ் கமிஷனரை நோக்கி, “என்ன தமாஷ் ஐயா இது! இவர் எங்களை வேறே யாராகவோ ஆள் மாறாட்டமாக நினைத்துப் பேசுகிறார்.