பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O3 செளந்தர கோகிலம்

நாங்கள் ஒரு நாளும் புதுச்சேரியில் இருந்ததே இல்லை. இவர்கள் இருவரும் என் தங்கைகள்தான். என் தகப்பனாரும் தாயாரும் கோவிந்தபுரத்தில்தான் இப்போதும் இருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமானாலும், இந்தப் பெண்ணையே கேட்டுப் பார்க்கலாம்” என்றார்.

அப்பொழுது புஷ்பாவதியின் உயிர் அநேகமாய்ப் போய்விட்டதென்றே கூறவேண்டும். அவள் வெட்கித் தனது முழங்காலின்மேல் தலையை குனியவைத்துக் கண்களை மூடியபடி குன்றிச் சோர்ந்து போய்விட்டாள். தங்களுக்கு எப்பேர்ப்பட்ட மானபங்கமும் தண்டனையும் நேர்ந்துவிடுமோ என்ற கிலியும் குலை நடுக்கமும் உண்டாகிவிட்டன. அவளது கைகளும் கால்களும் உதறத் தொடங்கின.

செளந்தரவல்லியோ சகிக்கவொண்ணாத பிரமிப்பும் ஆச்சரியமும் அடைந்து, தான் கேட்டது மெய்யோ பொய்யோ வென்று சந்தேகித்தவளாய் அவ்விடத்தில் நடந்த சம்பாஷணையை உற்றுக் கவனிக்கத் தொடங்கினாள். சுந்தரமூர்த்தி முதலியார் துளஸியம்மாள் என்ற பெண்ணைப் பெற்றோர் வீட்டிலிருந்து திருட்டுத்தனமாக அபகரித்து வந்துவிட்டார் என்பதையும், அவரது தந்தை குஷ்டரோகியென்பதையும், தாய் இரு கண்களு மற்ற குருடி என்பதையும் கேட்க, அவளது மனத்தில் சுந்தரமூர்த்தி முதலியார்மீது பெருத்த வெறுப்பும் ஆத்திரமும் உண்டாகத் தொடங்கின. அதுவுமன்றி, அவர் தன்னுடைய புகைப்படத்தைக் கொண்டுபோய்ப் புஷ்பாவதியின் படமென்று அழகிய மணவாள முதலியாருக்குக் காட்டி, அவரை ஏமாற்றி விட்டார் என்பதையும், அழகிய மணவாளர் உண்மையில் காதல் கொண்டது தன் மீதே என்பதையும் உணர்ந்து கொண்டாள். உணரவே, அவள் சுந்தர மூர்த்தி முதலியாரை விட்டுத் துர நகரத் தொடங்கியதன்றி, அடிக்கடி தனது கடைக்கண் பார்வையை அழகிய மணவாளர் மீது செலுத்தி, அவரது ஒப்பற்ற வடிவழகைக் கண்டு ஆநந்த பரவச மெய்தத் தொடங்கினாள். அவளது உரோமம் அடிக்கடி சிலிர்த்து ஆநந்த நர்த்தனம் செய்ய ஆரம்பித்தது.

அவ்வாறு மண்ப்பெண்கள் இருவரும் இருக்க, மறுபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி முதலியாரை நோக்கி, “ஒ