பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 221

அம்மாதிரி போனவள் விடியற்காலம் ரயிலிலேறிக் கூடலூர் வரையில் போய்க் கெடிலம் என்ற ஆற்றில் விழுந்து விட்டாள் போலிருக்கிறது. அதைக்கண்ட ஜனங்கள் ஆற்றில் குதித்து அந்த அம்மாளைக் காப்பாற்றி உயிர்ப்பித்ததாகவும், போலீசார் அந்த அம்மாளை டிப்டி கலெக்டரிடம் கொண்டுபோனதாகவும், அவர் அந்த அம்மாளைக் கண்டு இரங்கி, அவள் செலுத்தவேண்டிய அபராதத்தைத் தாமே செலுத்திவிட்டு, அந்த அம்மாளைத் தம்முடைய வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவருடைய வீட்டு ஜனங்கள் அந்த அம்மாளை உபசரித்து வைத்திருப்பதாக வும் பத்திரிகையில் சமாசாரம் வந்தது. ஆனால், அது அந்த அம்மாள்தான் என்று பெயர். ஊர் முதலியவற்றைக் காட்டிக் குறிப்பாகச் சொல்லப்படவில்லை. இவர் அதைப் பார்த்தவுடன், ‘சரி, இது அந்தக் கற்பகவல்லி முண்டையாகத்தான் இருக்க வேண்டும். அவள் கெட்ட கேட்டுக்கு உபசரணையென்ன! நானாக இருந்தால், அந்த ஆற்றிலிருந்து அவள் மேலே கிளம்பாமல், அப்படியே பிடித்துத் தண்ணிருக்குள் அழுத்தி மணலில் புதைத்து விட்டிருப்பேன். இப்போதுதான் அவள் எங்கே தப்பினாள்? நான் என்னுடைய ஆளை அனுப்பியே அவளுடைய கழுத்தை இரண்டாய் வெட்டிப் போட்டுவிடச் செய்கிறேன்” என்று வெகு சாதாரணமாகச் சொல்லுகிறார். இது மாத்திரமா ‘இருக் கட்டும் இந்தக் கலியாணம் முடியட்டும். உடனே அந்தக் கோகிலாம்பாள் எங்கே போனாள் என்பது எவருக்கும் தெரியாதபடி அவளுக்கு நான் தக்க வழி செய்து விடுகிறேன்’ என்றும் இவர் சொல்லுகிறார். இதுபோலவே என்னுடைய ஆயிசும் இவருடைய கலியானம் வரையில்தான் நீடித்திருக்கு மென்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. ஆகையால், தாங்கள் கருணை கூர்ந்து அதற்குள் ஆளை அனுப்பி என்னை இந்தக் கொடிய இராrசனுடைய சிறையிலிருந்து மீட்கக் கோருகிறேன்.

இங்கனம் தங்கள் இருவரையும் நினைத்துருகும் குமாரி துளஸியம்மாள்

- என்று அழகிய மணவாளர் இரண்டாவது கடிதத்தைப் படித்து முடிக்கவே, அங்கிருந்த ஜனங்களெல்லோரும், “ஆகா!