பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 செளந்தர கோகிலம்

இப்போது நான் இருக்கும் நிலைமையே நல்லது. இப்படியே இருந்து விடுகிறேன். அவளைக் கண்டுபிடிப்பதற்காக நீ இனி எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை. நீ திருவனந்தபுரத்திலிருந்து கொண்டு வந்த செல்வமே எனக்கு அபரிமிதமாக இருந்தது. அதோடு, நீ என் பொருட்டு படாதபாடெல்லாம் பட்டு, திருவடமருதூரிலிருந்த என் ஸ்தாவர சொத்துக்களையும் மீட்டுக் கொடுத்தாய், அதுவுமன்றி, என் கூடியரோகத்தை நிவர்த்தி செய்து, எனக்குத் தேக ஆரோக் கியத்தையும் மனோ திடத்தையும் உண்டாக்கி வைத்து, சகலமான சுகபோகங்களையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாய். நான் கடைசி வரையில் இந்த நிலைமையிலேயே இருந்து என் பொழுதையெல்லாம் தெய்வ பூஜையிலேயே நான் போக்கிக் கொண்டிருந்தபடியே இந்த மண்ணுலகைவிட்டு ஈசனுடைய பொன்னடிக்குப் போய்ச் சேர்ந்து விடுகிறேன். ஆனால் நான் கடைசியாக உன்னிடம் கோருகிற வேண்டுகோள் ஒன்று இருக்கிறது. அருமைச் செல்வனான என் குமாரனை இனி நான் இந்த ஜென்மத்தில் பார்க்க முடியாமல் செய்துவிட்டு அவன் எனக்கு முன்பாக எம்பெருமான் திருவடி மலரை அடைந்து விட்டான். நான் எவ்வளவுதான் அழுது புரண்டாலும், அவனு டைய திருமுகத்தை நான் இனி காணப் போகிறதில்லை. அவனு டைய குழந்தை ராஜாபகதூரின் நினைவும், அவனுடைய தாயான காந்திமதியின் நினைவும் என் மன்சை விட்டு மாற மாட்டேனென்கின்றன. அந்த ஏக்கம் தீராமல் இருந்து என் உயிரை வாட்டிக் கொண்டே இருக்கிறது. இந்தக் கமலத்தைக் கண்டுபிடிப்பதைவிட்டு, இவ்வளவு பிரயாசையையும், அவர்கள் இருவரையும் கண்டுபிடிப்பதில் நீ திருப்பினால், அது பலன் தருமென்று நினைக்கிறேன். நான் இறப்பதற்குள் அவர்கள் இருவரது முகத்தையும் நான் ஒருதரமாவது பார்க்காவிடில், என் தாக விடாய் தணியாது. என் ஏக்கமும் தீராது. என் ஜென்மமும் கடைத்தேறாது. நான் மறுஜென்மத்தில் நிம்மதியற்ற அலகையாய்த் தான் பிறந்து உழலுவேன். என்னப்பனே! என் பேசுந் தெய்வமே! இந்த என்னுடைய ஒரு வேண்டுகோளை மாத்திரம், நீ அவசியம் பூர்த்திசெய்து வைத்துவிடவேண்டும். என்னிடம் நீ இப்போது ஒப்படைத்திருக்கும் அபாரமான செல்வத்தையெல்லாம் நான்