பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 257

இங்கேயே நடத்து என்று சொல்லிவிட்டார் என்றனர். இன்னம் சிலர், “அக்காளை விட்டுத் தங்கைக்குக் கலியாணம் செய்வது சரியல்ல. ஆகையால், அதையும் இதோடு சேர்த்து அவசரமாய்ச் செய்ய நேர்ந்ததேயன்றி, அழகிய மணவாளருக்குப் புத்தியில்லா மையால், இப்படிச் செய்கிறார் என்ற நினைக்க வேண்டாம்.” என்றனர். அவ்வாறு அங்கு சம்பாஷணை நடந்து கொண்டிருந்த சமயத்தில் திருமாங்கலிய தாரணத்திற்கு ஆரம்பம் செய்தனர். அப்பொழுது உதவிச் சாமியார் திவான் முதலியாரை நோக்கி, ‘சுவாமிகளே! பெரிய பெண்ணைக் கட்டப் போகும் பிள்ளை யாண்டானைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். நம் ராஜா பகதூரின் முகச் சாயல் கொஞ்சம் இருப்பதுபோலத் தோன்று கிறதே!” என்றார்; உடனே திவான் சாமியார் திடுக்கிட்டு, ‘அவனை நீங்கள் எங்கே பார்த்திருக்கிறீர்கள்?’ என்றார். உதவிச் சாமியார், ‘நான் திருவடமருதூரில் எப்போதோ ஒரு தரம் பார்த்த மாதிரி இருக்கிறது. வேறு எங்கே பார்க்கப் போகிறேன்” என்றார். உடனே திவான் சாமியாரும், குஞ்சிதபாத முதலியாரும் மிகுந்த மனவெழுச்சியும் ஆவலும் அடைந்து அவனது முகத்தை உற்று உற்று நோக்கி, “ஆம்: முகம் அப்படித்தானிருக்கிறது” என்று கூறி ஒரே ஆவல் வடிவாக வீற்றிருந்தனர்.

உடனே உதவிச் சாமியார் எழுந்து நின்று, ‘புரோகிதர் ஐயா! ஸ்வாமிகளே!” என்று ஒங்கிக் கூப்பிட்டார். அந்தக் குரலைக் கேட்டு ஆண் பெண் பாலார் எல்லோரும் திடுக்கிட்டு உதவிச் சாமியாரை உற்றுப் பார்த்தனர். புஷ்பாவதியை அழைத்துப் போன சாமியார் அவ்வாறு நின்று கூப்பிட்டதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். புரோகிதர் கடுகடுத்த கோப முகத்தோடு, ‘யார் ஐயா நீர்! அன்றைய தினம் மாங்கலிய தாரணம்.நடந்தபோது போலீஸ் கமிஷனர் தடுத்தார். இப்போது நீர் தடுக்கிறீர்! ஏன் ஐயா! நல்ல சமயத்தில் இப்படி அச்சானிய மாய்த் தடுக்கிறீர்?’ என்றார். உடனே உதவிச் சாமியார் தமது கைகள் இரண்டையும் குவித்தவண்ணம், “புரோகிதர் சுவாமிகளும் சரி, மற்ற கணதனவான்களும் சரி, அடியேன் மேல் கோபிக்கக் கூடாது; அன்று போலீஸ் கமிஷனர் குறுக்கிட்டதில், எவ்வளவு அபாரமான நன்மை ஏற்பட்டதென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதுபோலவே இன்னொரு பெரிய நன்மையைக் கருதி செ.கோ.:W-17