பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 செளந்தர கோகிலம்

நீயே, வண்டி ஒடத்தில் ஏறுவது ஒரு காலம். ஒடம் வண்டியில் ஏறுவது இன்னொரு காலம். எத்தனையோ குற்றவாளிகளுடைய தண்டனையை முடிவாக ஒப்புக்கொள்ளும் அதிகாரத்தை நான் வகித்திருந்தேன். இப்போது நானே கைதியாகி சிறைச்சாலைக் குள் நுழைந்திருக்கிறேன். அந்தக் காலத்தில், நிரபராதியான மனிதர்கள் இவ்வாறுதான் தண்டனை அடைந்தார்களோ என்னவோ. அவர்களுடைய வதை இப்போது என்னைத் தாக்கியிருக்குமென்றே நான் எண்ண வேண்டியிருக்கிறது. இருந்தாலும், என்னை இரண்டொரு நாட்களோடு விட்டுவிடப் போகிறாயோ, மாசக் கணக்கில் அல்லது வருஷக் கணக்கில் இந்த நிலைமையிலேயே வைக்க விரும்புகிறாயோ என்பதுதான் தெரியவில்லை. நான் திடீரென்று இப்படி மாயமாய் மறைந்து போய்விட்டால், என்னையே சதமென்று நம்பி இருக்கும் என் விருத்தாப்பியத் தந்தை எப்படி உயிர்வாழப் போகிறார். எனக்கு நேரிட்ட கதியை நான் அவருக்குச் சொல்லியனுப்பவும் மார்க்கம் இல்லை; சொல்லி அனுப்பினாலும், அவர் அதைக்கேட்டு மன முடைந்து வருந்தி உடனே இறந்து போனாலும் போய் விடுவார். ஆகையால், நான் நீடித்த காலத்துக்குத் தண்டனை அடைந்தாலும், அதை அவருக்குத் தெரிவிக்காமல் இருப்பதே உசிதமாகப் படுகிறது. என்னிடத்தில் இருந்த பணத்தையெல்லாம் அவரிடத்தில் கொடுத்துவிட்டாவது வராமல் போனேன். அங்கே பணத்தை வைத்தால், எவரேனும் அதைக் கண்டு, அதை அபகரிக்க முயற் சித்து அதனால் கிழவரையும் கொன்று போட்டுவிடப் போகிறார் களே என்று பயந்தல்லவா, நான் பணத்தையெல்லாம் என்னிடமே வைத்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் சங்கிலியைத் திருடிவிட்டதாக அபாண்டப்பழி ஏற்பட்டிருப்பதுபோல, வேறு யாராவது தற்செயலாய் இழந்துள்ள பெரிய பணத்தொகையை நான் தான் திருடியவன் என்ற பழியும் வந்து சேர்ந்தாலும் சேரலாம். அப்போது இந்தப் பணமும் என்னைவிட்டுப் போய்விடும். நல்ல வேளையாக திருவடமருதூரிலுள்ள ஸ்தாவர சொத்துகள் மறுபடி வந்து சேர்ந்திருக்கின்றன. அவைகளை வைத்துக்கொண்டு எப்படியாவது கிழவர் பிழைத்துப் போகலாம். என் சிற்றன்னை முதலியோரை அநேகமாய் மதுரையில் கண்டு பிடித்து விடலாமென்றும், அவர்களை மறுபடி கொணர்ந்து என்