பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 59

இப்படி அமோகமாய்ப் பெருகியதோ, எந்தக் காருண்ய வள்ளலின் பேராதரவினால், நீங்கள் மகாலகடிமியென்றும் பாக்கியசாலியென்றும் அழைத்த இந்தப் பெண் எனக்கு சம்சாரமாகக் கிடைத்தாளோ அந்தப் புண்ணியாத்மா ஒருவருக்கே என் குடும்ப ரகசியம் தெரிந்திருந்தது. அவரோ அகால மரணத்தினால் விண்ணுலகம் அடைந்துவிட்டார். அப்படி இருக்க, வேறு எப்படி நீங்கள் இதைத் தெரிந்து கொண்டீர்கள்? தயவு செய்து சொல்ல வேண்டும்” என்று நிரம்பவும் வணக்கமாகவும் விநயமாகவும் கூறித் தமது கைகளைக் குவித்து திவான் சாமியாரை நமஸ்கரித்தார். திருட்டுக் குற்றத்தைச் செய்தவரும், அவரையும் அவரது மனைவியையும் நிரம்பவும் அவமரியாதையாகப் படுத்தியவருமான கைதியிடம் முதலியார் அவ்வாறு பணிவாகவும் விநயமாகவும் நடந்து கொண்டது நியாயாதிபதி முதலிய எல்லோருக்கும் பெருத்த வியப்பைக் கொடுத்தது. அத்தகைய சம்பாஷணையை நீதிபதி அநுமதிக்கக் கூடாதாயினும், விஷயம் அவருக்கும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆகையால், அவர் பேசாமல் இருந்துவிட்டார். மற்ற ஜனங்களும் ஆவலே வடிவாக நின்று நிரம்பவும் கவனமாக அந்த சம்பாஷணையைக் கவனித்தனர். கந்தசாமி முதலியார் மறுபடி உள்ளே அழைக்கப்பட்டவுடனே அவரது மனையாட்டியும் ஒரு பக்கமாக நின்று அவ்விடத்தில் என்ன நடந்தது என்பதைக் கவனமாய்க் கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

அப்பொழுது திவான் சாமியார் மேலப்பண்ணை முதலியாரை நோக்கி, “முதலியார் ஐயா! நான் இன்னான் என்பதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்ற விரதத்தை நெடு நாளாக அதுஷ்டித்து வருகிறேன். ஆனால், சிலர் ஏதாவது குற்றத்தைச் செய்துவிட்டு போலீசாரிடம் அகப்படாமல் மறைந்து திரியும் பொருட்டு சந்நியாசிக் கோலம் பூணுவதுபோல, நான் யாருக்கும் பயந்து கொண்டு இப்படி மறைந்து கொள்ளவில்லை. இவ்விடத்தில் சிலர் அபிப்பிராயப்பட்டதுபோல, நான் பெண் பிடிக்கும் அர்ச்சுன சந்நியாசியுமல்ல, கழுத்து மணியறுக்கும் ருத்திராக்ஷப் பூனையுமல்ல, சில முக்கியமான காரணங்களால், நான் இந்த உலக விஷயங்களில் வெறுப்பும் விரக்தியும்