பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 97

யினாலும், அதிர்ஷ்டத்தினாலும், மகா தயாளமான மனசினாலுந் தான் வரும்படி சம்பாதிப்பதும் சரி, செலவு செய்வதும் சரி, எல்லாக்காரியங்களும் நடைபெறுகின்றன. யெளவனப் பிராய மாயிருந்தாலும், அம்மாள்தான் எல்லாவற்றிற்கும் சூத்திரதாரி. இங்கே வட்டாணம், தீத்தாண்டதனம் என்று பெரிய உப்பளங்கள் இருக்கின்றன. அவ்விடங்களில் அம்பாரம் அம்பாரமாக உப்பு தயாரிக்கப்பட்டு கப்பலில் ஏற்றுமதியாகிறது. அதன் சொந்தக் காரர் சில வருஷங்களுக்கு முன் வார்சில்லாமல் இறந்து போய் விட்டார். அவருடைய அநந்தர வார்கதாரர்களான இவர்களுக்கு அந்த உப்பளம் வந்து சேர்ந்தது. இதற்கு முன்னிருந்தவர் இரண்டாயிரம் ரூபாய் செலவும் செய்யமாட்டாமல் எல்லா வற்றையும் வெறும் திடலாகப் போட்டிருந்தார். அவருக்கு அதில் ஒரு பைசாகூட வரும்படி வரவில்லை. அவர் ஏழையாகவே இறந்தார். இவர்கள் வந்தவுடன் தங்களிடமிருந்த இரண்டாயிரம் மூவாயிரம் ரூபாயைப் போட்டு மெஷின்கன்ள வரவழைத்து வேலை செய்து அபிவிருத்தி செய்தார்கள். அதே சொத்து இப்போது பத்து லக்ஷம் ரூபாய் பெறும். இவர்களுக்கு வருஷம் ஒன்றுக்கு ஒரு லக்ஷம் ரூபாய் வரும். இவர்கள் சாப்பிட்டு மிஞ்சுவதையெல்லாம், இவர்கள் தான தருமங்களிலேயே செலவிடுகிறார்கள். இவர்களுடைய சத்திரம் இது ஒன்று மட்டுமல்ல. இதைப்போல இன்னம் 10 rேத்திரங்களில், இவர்கள் இப்படி சத்திரங்கள் கட்டி எல்லா இடங்களிலும் இப்படியே சாப்பாடு போட்டு அதிதிகளை உபசரிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எல்லாச் சத்திரங்களுக்கும் முதலியார் சத்திரமென்றே பெயர் வைத்திருக்கிறார்கள்’ என்றார்.

அதைக்கேட்ட திவான் சாமியார் பெருத்த வியப்பும் களிப்பும் அடைந்து, ‘ஆ அப்படியா! அதுவும் எம்பெரு மானுடைய திருவருள்தான். எல்லோருக்கும் இப்பேர்ப்பட்ட பாக்கியம் வாய்க்குமா! மகா சிலாக்கியமான புண்ணியம் செய்த சிலருக்கே இப்படிப்பட்ட புத்தியைக் கொடுத்து அதற்குத் தகுந்த வசதிகளையும் கடவுள் செய்து கொடுக்கிறார். இவர்கள் எல்லாச் சத்திரங்களுக்கும் முதலியார் சத்திரமென்று ஏன் பெயர் வைத்தார்களென்பதுதான் விளங்கவில்லை” என்றார். Gl.35|T.IV-7