பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவான் 令 岱9 சேர்ந்துட்டா சமாளிச்சுக்கலாம்னு மனசைத் தைரியம் பண்ணிக் கிட்டுப் பின்னாலே போனேன். 'நீ முளிக்காதே! அவன் ஒண்ணும் தப்பா நடந்துக்கல்லே. ஒரு பங்களாக்குள்ளார நூளைஞ்சோம். பெரிய தோட்டம். பூவும் செடியும் பாத்தியும் பச்சையும் எங்கே பார்த்தாலும் ஒரே குளுமையாயிருந்திச்சு கன்னுக்குட்டியாட்டமா ஒரு பெரிய நாய் என்னைப் பாத்து ஓடி வந்துது. அந்த ஆள் அதை விரட்டிட்டு என்னை வாசத் தாவாரத்திலே நிறுத்தி வச்சுட்டு உள்ளே போனான். “கொஞ்ச நேரம் பொறுத்து மூணு பொம்புள்ளைங்க உள்ளேருந்து வந்தாங்க. பாப்பாரு! பணக்காரு நகையும் நட்டும் நல்ல புடவையும் கட்டிக்கிட்டு இருந்தாங்க அவுங்களுக்குள்ளே என்னவோ வெள்ளைக்காரன் பாஷைலே பேசிக்கிட்டாங்க. அவுங்களுக்குள்ளே ஒரு பெரிய அம்மா இருந்தாங்க. அந்த ஆள் என்னை மொதமொதல்லே விசாரிச்ச மாதிரியே, அவுங்களும் விசாரிச்சாங்க. இன்னும் ஒண்னு ரெண்டு பொம்புள்ளே விஷயங்கூட விசாரிச்சாங்க. அப்புறம் அங்கேயே குந்தவெச்சு ஆளு வந்து சோறு போட்டான். குளுகுளுன்னு பழஞ்சோறு, என் வயிறு குளுந்துது. ஒன்னே நெனச்சுக்கிட்டேன். “கை களுவி, தண்ணியேந்திக் குடிச்சுட்டு, முந்தானையிலே கையைத் தொடச்சிக்கிட்டேன். உடனே இங்கிலீஸுலே என்னவோ பேசினாங்க பொம்புள்ளேங்க ஆம்புள்ளே மாதிரி இங்கிலீஸு பேசி இண்ணக்கித்தான் நான் பாத்தேன். உடனே ஒரு அம்மா உள்ளே போய் ஒரு குளந்தையை ஏந்தி வந்து என் மடியிலே வெச்சு, 'பாலைக் கொடு’ இன்னாங்க. “எப்படி மாட்டேன்றது? சோறு போட்டிருக்காங்களே! உப்புந்தண்ணியும் உலர்ந்த வயத்திலே ஊத்தியிருக் காங்களே!-”