பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 & லா. ச. ராமாமிருதம் இருக்கும். சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும்."- நான் சொல்வதெல்லாம் அவள் காதில் விழுந்தால்தானே! "பூர்வா, பூர்வஜன்மத்தில் நீ என்னவாய் இருந்திருப்பாய் என்று யோசித்துக்கொண்டிருக்கிறாயா? அவள் கண்களில் முதன்முதலாய் ஒரு குறுகுறுப்பும் விந்தையும் தட்டின. “ஏன் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது?” என்னை உறுத்திய எரிச்சல் திடீரென்று தணிந்தது. அதற்குப் பதில் மனசில் ஒரு சிறு விசனம் புகுந்தது. "ஆம், மிருகங்களுக்குப் பூர்வ ஜன்ம வாசனையிருக்குமாம். அதனால் தான் அவைகள் ஆகாரம் தின்னாத வேளையில் தம்முள்தாமே ஆழ்ந்திருக்கின்றன. ஐயோ, அந்த ஜன்மத்தில் அப்படியிருந் தோமே, இப்பொழுது இப்படியிருக்கிறோமே என்பது அவைகளின் சிந்தனை போலும்! நீ அநேகமாய் அப்படித்தான் இருக்கிறாய்.” 'உம்?” என்று சிரித்துக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவளுக்குப் பேசப் பிடித்தமான விஷயம் ஏதோ கண்டுபிடித்து விட்டேனென்று தோன்றிற்று. அதில் ஒரு சந்தோஷம். அவளை சுவாரஸ்யப்படுத்தும் விஷயம் ஏதோ ஒன்றேனும் என்னிடம் இருப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம். மனிதனின் சபலத்தை என்னென்று சொல்வது? ஜன்னல் கண்ணாடியில் மழைத்தாரை வழிந்தது. அதற்கப்பால் மாரியிருளின் மங்கலில் தோட்டத்தின் மாதுளை மரம், அந்தண்டை மதிற்கவர், அதற்குமப்பால் சற்று மேட்டு நிலத்தின் மேல் ஏறும் வண்டிப் பாதை அதற்குமப்பால் சவுக்கு மரங்கள், அவைகளின்மேல் மழை மேகங்கள் கவிழ்ந்த வானம், அதற்குமப்பால் தூக்கங் கலைந்து பசி கண்ட சிங்கத்தின் கர்ஜனைபோல் இடியின் குமுறல். இப்போதைக்கு வெக்கை யளிக்கும் தினுசாய்த் தோன்றவில்லை.