பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹாபலி శస్త్రి $45 பேர் அதன் பழங்களைப் பறித்துத் தின்றுவிட்டு, சப்பிய கொட்டைகளை அடிமரத்தின் மேலேயே லொட்டு லொட்டென அடித்துவிட்டுப் போயிருப்பார்கள்! ஒருவேளை அந்தக் குளமே, அந்த மரம் இரவில் வருஷக் கணக்காய் உதிர்த்த கண்ணிரின் தேக்கந்தானோ என்னவோ! சகல சுக துக்கங்களையும் அநுபவித்துத் தேர்ந்து, வாழ்க்கையை ஒரு தினுசாய் முடிவுகட்டி, கட்டுச் சரிந்து பழுத்த சுமங்கலி போல் இருந்தது அம்மா. அதற்கு நன்றாய்த் தெரியும், பிறக்கப் பிறக்க அழிவு. அதேமாதிரி, அழிய அழியப் பிறப்பு உண்டு என்று. ஆகையால், அதன் இலைகளும் காய்களும் கல்லின் அடிபட்டோ, காலத்தின் மூப்பேறியோ உதிர உதிர, அது இன்னமும் புஷ்பித்துக் கொண்டுதானிருந்தது. வாழ்க்கையில் அது கண்டது. இதுதான். அது உளுத்தோ, புரையோடியோ, வெட்டி விறகாயடுக்கும் வரையில் அப்படித்தான் செய்து கொண்டிருக்கும். ஆகையால், கதுை.ாரத்திலிருந்து கேட்கும் தந்திநாதம் போல், காற்றில் மிதந்துவரும் மகரந்தப் பொடிகளை அதன் பூக்கள் ஏற்க மறுக்கவில்லை. மகவே பெறாதிருந்தால் இளமை மாறாதென்று தங்களைத் தாங்களே ஏய்த்துக் கொள்ளும் மாந்தரைப்போல் இல்லை அவை, ஆகவே அதன் பல பூக்களில் ஒரு பூ வயிற்றில் ஒரு வித்தை வாங்கிக்கொண்டு, கருத்தரித்துக் காயாயிற்று. நான்கு இலைகள், தங்களுடைய அருமைத் தங்கையைப் பையன்களின் கண்ணும் பறவைகளின் பார்வையும் படாமல் மூடிக் காத்தன. அவள் வெகு அழகாயிருந்தாள். நாளடைவில், மணவறையில் மணமகளின் கன்னங்கள் போல், அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது. ராஜாளி தன் சிறகுகளை விரித்துக்கொண்டு பாறையி னின்று எழுவதுபோல், காலை வேளையில் கதிரவன் தன்