பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& $60 る。 லா. ச. ராமாமிருதம் வார்த்தைகளுக்குக் காத்துக்கொண்டிருந்தேன். அவன் மாங்கொட்டையை எறிந்துவிட்டு அருகில் கிடந்த ஒரு சுள்ளியை எடுத்துத் தரையில் கோடு வரைய ஆரம்பித்தான். “படுபாவி இவளாலெதான் கை போச்சு!" “தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாரிட்டியும் திட்டித் திட்டி இன்னும் ஆத்திரம் தீரல்லியா? இன்னும் எத்தினி நாளைக்கி இப்படி?” அவள் குரலில் அலுப்புத் தட்டிற்று. ஒரு சிறு அழுகை நடுங்கிற்று. “எப்படித் தீரும், பட்டி மவளே! என் கை போனது பெரிசில்லே, அப்புறம் உன் வீட்டுலே என்னை மேலும் பண்ணப் பாத்தாங்களே, அது ஆறுமா? வரவர வாக்குவாதம் அந்தரங்கமாகிக் கொண்டிருந்ததால் நழுவப் பார்த்தேன். ஆனால் அவள் என்னைச் சாட்சிக்கு அழைத்துவிட்டாள். "இதைக் கேளு தம்பி! என்கூடப் பொறந்தாட்டியா சொல்றேன்-” “என்ன மச்சான்! சவிக்கமா? எப்ப வந்தே? உன் அக்கா சொல்லுதக் கேளு!” என்று அவன் கேலி பண்ணினான். “அது கெடக்கு இதெக் கேளு தம்பி; எண்ணக்கிமே அது எடக்குத்தான்.” “அது மாதிரியெல்லாம் பேசாதே, பொம்புள்ளே! நான் சொல்றதெ அது கேக்கட்டும். இவுளுக்கும் எனக்கும் ரொம்ப நாளத்திய முடி என்னா, தெரிஞ்சுதா? ஆனா இவ வீட்டிலே நெனச்சமாதிரி நான் உருவாவலே. இந்த நாட்டுப்புறம் நெனைச்சுது, நாள் முளுக்கக் கலப்பை புடிச்சு, வேளா வேளைக்குக் கூழைக் குடிச்சுட்டு மாடத்துப் புள்ளையாருக்குப் பூசை பண்ணிக்கிட்டுப் படிஞ்ச மாடா காலத்தைத்