பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணுக்கள் & $65 ‘'எதுக்கு சொல்ல வந்தேன்னா, நான் தேசம் சுத்தினப்போ இவளைவிட ரம்பையெல்லாம் பாத்திருந்தேன். நம்மை ஏமாத்தணும்னு எண்னம் வெக்கறப்போதான் எண்ணம் அப்படியே திரிஞ்சுயூடுது- மூடியைத் திருகுவதுபோல் கையைத் திருகிக்கொண்டு, திரிஞ்சு பூடுது என்றான். "அதுக்காவ என் அப்பன் மேலே வெச்ச கோவத்தை என்மேலே இன்னமும் ஆண்டுக்கிட்டிருக்கையாக்கும்! நீயே சொல்லு தம்பி, கட்டிக்கொடுக்கற வரைக்கும் பெத்தவங் களுக்கு அடங்கி நடக்கணும். அப்புறம் கட்டிக்கொடுத்த இடத்துக்கு விசுவாச காதகம் பண்ணாமெ இருக்கணும். என்னா நான் சொல்றது? “என்னாத்தைச் சொல்றது! நீ இண்ணக்கித் தோலைச் செருப்பாத்தான் தச்சுப் போடேன். அதுனாலே நேத்திக்குச் செஞ்சது மறந்து பூடுமா?” "மறந்துதான் ஆவனும் மறந்தாத்தான் இருக்க முடியும்.” அவன் தனக்கே முணுமுணுக்க ஆரம்பித்தான்: ‘காரியம் மாத்திரம் கடப்பாறையாச் செய்துடுவாங்க. அப்புறம் நம்மை மறந்துடும்னு சாஸ்த்ரம் படிப்பாங்க." - நான் நழுவப் பார்த்தேன். இடம் இம்சையாயிருந்தது. “என்ன தம்பி, கரும்பு வாங்கலியா? கதை கேட்டியே!” இரண்டு கரும்புகள் வாங்கிக்கொண்டு போனேன். ஒரே அடியா உப்புக் கரிக்கிறது? காசைக் கரியாக்கினியா?” என்று அம்மா இரைந்தாள். பிறர் இழைக்கும் பெருந் தவறுகளில் அம்மா காண்பிக்கும் பெருந்தன்மை பிரமிக்கத் தக்கதாயிருக்கிறது! சில சமயங்களில் சின்ன விஷயங்களில்கூட அவள் பொறுமை இழப்பது அதைவிட ஆச்சரியமாயிருக்கிறது. ஒரே கணுவுள் முழுத் தித்திப்பையும் தேடுபவர்பாடே உப்புக் கரும்புதானோ?”