பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 * லா. ச. ராமாமிருதம் என் வேலைக்குக் கூலியாய் வாசல் தூணில் ஒர் உண்டி கட்டியிருக்கும். அமாவாசைக்கு அமாவாசை திறந்து அதிலிருப்பதைத் துழாவியெடுத்துக் கொள்ளலாம். இப்படித் தான் என் காலந் தள்ளிக்கொண்டிருக்கிறது. எனக்கும் இரண்டு குழந்தைகளிருக்கின்றன. வெளியில் விளையாடப் போயிருக் கிறார்கள். போதும் போதாததற்குச் சென்ற இரண்டு வருடங்களாக நான் கிராமத்துப் போஸ்டு மாஸ்டர். ஆனால் என் மாதச் சம்பளம் ஆறு ரூபாயை நான் முழுசாய்க் கண்டதில்லை என்பதை நினைக்கச் சிரிப்பாயிருக்கிறது. ஸ்டாம்புப் பணத்திலிருந்து அவ்வப்போது கறிகாய்க்கும் கைச்செலவுக்கும் கையாண்ட பணத்தை இட்டு நிரப்புவதற்கே சரியா யிருக்கும். அப்படியும் எங்கெங்கோ சுற்றியும், அத்தனை நாட்கள் கடந்தும், எந்தையும் என் தாயும் எங்களைப் பெற்று வளர்த்துப் புழங்கிய இதே வீட்டில் நான் மறுபடியும் இப்படி உட்கார்ந்து கொண்டு இன்னமும் இதையெல்லாம் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கையில், அதில் ஒரு ஆச்சரிய இன்பம் என்னைப் பரவசப்படுத்துகிறது. மனம் புரியாததொரு தெளிவையடைந்திருக்கிறது. நான் காலத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறேனா, அல்லது இத்தனை நாட்களாய்க் காலம்தான் என்னைச் சுற்றுகிறதா எனும் கேள்வி தானாகவே என்னுள் எழுகிறது. அதற்கு பதில் கண்டுபிடிக்கும் முயற்சியில் அக்கேள்வியைச் சுற்றிச் சுற்றிவர, தெருவில் போய்க்கொண்டிருக்கையில் நான் முன்பின் அறியாத ரூபவதியான ஒரு அன்னிய ஸ்திரீ என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே போனால் எனக்கு எப்படியிருக்குமோ, அதே இன்ப வேதனையும் வியப்பும் அடைகிறேன். அக்கேள்வியை ஆராய ஆராய, அதன்