பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 : லா. ச. ராமாமிருதம் தெருவில் ஒருவன் வெற்றிலை விற்றுக்கொண்டு சென்றான். மாதிரிக்குக் கையில் ஒரு கவுளி-ஒடிந்த இறக்கை மாதிரி. அந்த உவமை மனத்தில் பட்டதும் மறுபடியும் பூரீமதியின் மேல்தான் நினைவு தொடர்ந்தது. ஏனெனில், சென்ற இரண்டு வருடங்களாகவே அவள் ஒடிந்த இறக்கை யுடன்தான் வளைய வந்துகொண்டிருந்தாள். இப்பொழுது அவளுடன் கூடவந்த அவள் மகன் கருவா யிருக்கையிலேயே, அவள் புருஷன் இங்கெல்லாம் வேலை தேடி மனஞ்சலித்து, ஒருவருக்கும் சொல்லாமல் சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டான். புக்ககத்தில் அவளைக் கவனிக்கக்கூடிய நெருங்கின பந்துக்கள் யாருமில்லை. பிறந்த வீட்டுச் சாய்கால் தான் எத்தனை நாட்களுக்கு இருக்கும்? பெற்றவர்களின் ஏச்சும் இடிசொல்லும் பொறுக்கக்கூடியதாயில்லை. குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, தனிப் பிழைப்பாகவே வந்துவிட்டாள். இலை தைத்து விற்பதும், சமய சந்தர்ப்பங் களுக்குச் சமைத்துப் போடுவதும், சிறு பrணங்களின் வியாபாரத்திலும் அவள் ஜீவனம் நடந்துகொண்டிருந்தது. கோவிலுக்குப் பக்கத்தில் ஒரே அறையுடன் கட்டிய ஒரு இடிந்த வீடுதான் அவள் குடில். சந்தர்ப்பங்களின் சதியால், தன் ஆணின்றி, துணையின்றி வாழ நேர்ந்து, அதுவும் சற்றுக் களைமுகமும் கட்டுடலும் படைத்துவிட்ட ஒரு வயதுப் பெண்ணை, வழக்கப் பிரகாரம் ஏதேனும் பேச ஊர் நாக்கு துடித்தாலும், அவளைக் கண்டு ஏனோ எதற்கோ அஞ்சி முடங்கியது. மத்தியான்னம் கட்டுவேளைக்கு, தன் குழந்தையே தனக்கு ஆண் துணையாய், அவன் கையைப் பிடித்துக்கொண்டு வந்து தபால் அறை வாசலண்டை வந்து நிற்பாள். குனிந்து அவனைப் பார்த்து, “டேய்! மாமாவைக் கேளுடா- அப்பா கிட்டேயிருந்து ஏதாவது கடிதாசு வந்திருக்கான்னு” என்பான்.