பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனுக்கள் : 171 அவனுக்கென்ன, நாலு வயதுதானிருக்கும். அவன் அம்மா எப்படியோ சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்து, ஆசையாய்த் தைத்து மாட்டியிருக்கும் அரை நிஜாரையும் அரைக்கைச் சொக்காவையும் மாட்டிக்கொண்டு, எவ்வளவோ சுத்தமாய் அலம்பியும் நூலொழுகும் மூக்குடன் வாயில் கட்டைவிரலை மாட்டிக்கொண்டு, என்னைத் தன் ஸெலுலாயிட்டுப் பொம்மைக் கண்களுடன் ஆழ்ந்து பார்க்கையில், என்னை ஏதோ சங்கடம் பண்ணும். கடிதம் இருந்தால் அவனண்டை வந்து குனிந்து கொடுப்பேன். "எங்கேடா உங்கப்பா?” வாயில் போட்ட கட்டைவிரலை யெடுக்காமலே, "அப்பா ஒ போயிட்டா- நேக்குப் பப்புட்டு வாங்கிண்டு வவ்வா” என்பான். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாய் பூரீமதியின் புருஷனிடமிருந்து ஒழுங்காய்ப் பணமும் வரவில்லை; கடிதமும் வரவில்லை. சேர்ந்தாற்போல் இப்போது ஆறு மாத காலமாய் அவனிடமிருந்து ஒரு வரியுமில்லை. - - பையன் வாசற்படியண்டை வந்து நிற்பான். "மாமா! அம்மா ஒவு கவவ் வாங்கிண்டு வவச் சொன்னா, காசு நாளைக்கித் தவாளாம்’- அவனுக்கு இன்னும் ரகரம் படியவில்லை. கொடுப்பேன். இன்னொரு நாள் வருவான். "மாமா அம்மா ஒவு கவவ் வாங்கிண்டு வரச் சொன்னா. மின்னயே ஒவு கவவ் பாக்கியாம். அத்தோடு இதையும் சேத்துத் தவாளாம்.” கொடுப்பேன். "மாமா, அம்மா கவவ் வாங்கிண்டு வவச் சொன்னா.” "மாமா, அம்மா கவவ் வாங்கிண்டு வவச் சொன்னா.”