பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 & லா. ச. ராமாமிருதம் விட்டடித்துக்கொண்டு போயே போய்விட்டான் ஆட்டுக்கு நடுமுதுகு ஒடிந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் எழுந்திருக்க முயலுந்தோறும் ஒரு அலறல்தான் அதனின்று கிளம்பி, அதைக் கீழே தள்ளுகிறதேயொழிய, அதனால் நிற்க முடியவில்லை. அதன் குட்டிக்கு என்ன தெரியும்? அது பால் குடிப்பதற்காக அதைச் சுற்றிச் சுற்றி, முனகி முனகி, முகர்கிறது. இதைப் பார்க்கையில் அந்த ஞாபகம் சொல்லாமலே என்முன் எழுந்தது. தலையைப் பிடித்துக்கொண்டு நடந்தேன். நெற்றி கசகசத்திருந்தது. ※ 米 : "ஏன் மாமி? என் குழந்தையைத் தூக்கிண்டு என்னிடத் துக்கு நான் போறதுக்கு எனக்கென்ன வெட்கமா, பயமா? ஆனால் கால் நடையாய்ப் போயிடறத்துக்கு மூணு மைல் தூரமா? ரயில் பிரயாணமாய்ப் போறதுக்கு முந்நூறு மைல் தூரமா? உள் நாடுகூட இல்லையே, மாமி! நான் எங்கே போவேன், எப்படித் தேடுவேன்?” அழுகைக்கிடையில் சிந்தும் வார்த்தைகள் என் நெஞ்சைப் பிழிகின்றன. மேல் காரியம் ஒடமாட்டேன் என்கிறது. எல்லாத் துக்கமும் இவள் துக்கமும் ஒன்றாகிவிடுமா? "மாமா, அம்மா ஒவு கவவ் கேக்கவா-” இப்பொழுதுகூட, வந்த தபாலைப் பார்த்துக்கொண் டிருக்கையில், அவள் பேசுவது ரேழியிலிருந்து கேட்டது: “எனக்கு இனிமேல் ஒண்ணும் வேண்டாம், மாமி! சிங்கப்பூரிலிருந்து சம்பாதிச்சு, தூக்கமுடியாமல் தூக்கிண்டு ஒண்ணும் வரவேண்டாம். தன் புள்ளைக்கு தகப்பன்னு தான் மாத்திரம் தனியா வந்து சேர்ந்தாப் போறும். ஒண்ணுமே வேண்டாம். ஆத்துலே வந்து உட்கார்ந்தாப் போறும்.