உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் ** 437 தானே! அவர்களுக்கு ஏன் இப்படி ஒட்டுதல் ஏற்படவில்லை? ஜானாவின் நிலை கண்டு வெறும் அநுதாபத்திலேயே பிறந்ததல்ல அவர்களிடையில் உள்ள பாசம். குழந்தைப் பருவத்துச் சம்பவம் ஒன்று அவள் நினைவில் மின்னியது. சிறுவயதில் சந்துரு மகா துஷ்டன். திடீரென்று ஏதோ வெறி வந்து ஜானாவைக் கீழே தள்ளிவிட்டான். ஜானா அழுதுகொண்டே போய் அப்பாவிடம் சொன்னாள். அப்பாவுக்கு ஆபீஸிலிருந்து வந்த சிரமம் சாரத்தில் செருகி யிருந்த கயிற்றை உருவி, சந்துருவை வீறுவீறென வீறிவிட்டார். கண்ணெதிரில் சந்துரு துள்ளித் துடிப்பதைக் கண்டதும் ஜானாவுக்கு உடம்பு வெலவெலத்துவிட்டது. சந்துருவைத் தேடிக்கொண்டு போனாள். கட்டில்மேல் சுருட்டி வைத் திருக்கும் படுக்கைகளுக்கிடையில் சந்துரு குப்புறப் படுத்துக் கொண்டிருந்தான். முதுகில் கிண்டு கிண்டாய் எழும்பியிருந்தது. அங்கங்கே சிராய்ப்பு. նէٹیئے}ண்,3Ğð#ff !—” “போடி!- உன்னாலேதாண்டி!” சந்துரு சீறி விழுந்தான். அவன் கன்னங்களில் கண்ணிர் காய்ந்து போயிருந்தது. அவள் கண்கள் தளும்பின. "இல்லேண்ணா!-” “ஏண்டி வந்தே? போ- போ-?” "தேங்காயெண்ணெய் தடவறேன், குப்புறப் படுத்துக்கோ, அசக்காதே-” - வெறும் பார்வையிலிருந்தே ஒன்றன் நிலையை ஒன்று அறிந்துகொள்ளும் மிருகத்தன்மை அவர்கள் உறவில் மிளிர்ந்தது. இத்தனைக்கும் அவர்களிடையில் தனி ரகசியங்கள் கிடையாது. வான் என்றும், எப்பொழுதும், எல்லோருக்கும்