பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 : லா. ச. ராமாமிருதம் திறந்துதானே இருக்கிறது. ஆயினும் அதில் இன்னும் புதைந்து கிடக்கும் ரகஸ்யங்கள் எத்தனை! அநேகமாய் அவர்களிடையில் தர்க்கங்களும் மனஸ்தாபங்களும்தான் இருக்கும். வானத்தில் மேகங்கள் மோதி மின்னல்கள் பிறக்கவில்லையா? கடுமழை உடைப்பெடுத்துக் கொள்ளவில்லையா? சமுத்திரத்தில் அலைகள் கக்கவில்லையா? அவர்கள் உறவின் மூல மூர்க்கம் புரியவுமில்லை, புரியாமலுமில்லை. அதன் இரட்டைத் தன்மையின் சூட்சுமமே அதுதான். கல்யாணமான புதிதில் சந்துரு பார்த்தவர் அதிசயிக்கும் படி தகதகத்தான். அடர்ந்த புருவங்களின் அடியில் பூனைக் கண்கள் விட்டுவிட்டுப் பிரகாசித்தன. அப்பொழுது அவன் மயிர் மைக் கறுப்பாய்த்தான் இருந்தது. நெற்றியில் சில சமயங்களில் குங்குமம் இட்டுக் கொள்வான். பக்தியினால் அல்ல; அழகுக்காக ஓரிரவு மணி இரண்டு இருக்கும். ஜானாவுக்குத் திடுக்கென விழிப்பு வந்தது. திடீரென்று போட்ட விளக்கில் அறை ஒரே வெளிச்சமாயிருந்தது. சந்துரு கட்டிலருகில் நின்று கொண்டிருந்தான். அவன் கண்கள் விரிந்து அவள்மேல் தாழ்ந்திருந்தன. ஆனால் பார்வை அவள் மேல் இல்லை. ஏதோ பரவசத்துடன் ஆழ்ந்திருந்தன. அவன் உதடுகளில் ஒரு புன்னகை ஆரம்பித்தது, ஆரம்பித்த நிலையிலேயே தோய்ந் திருந்தது. ஜானா எழுந்து உட்கார்ந்தாள். 'என்னடா அண்ணா?” சந்துரு கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தாள். "ஜானா, நான் ஒரு கனாக்கண்டேன். இப்பொத்தான் கண்டேன். கண்டதிலிருந்து என் நிலையில் இல்லை. என்னை என்னவோ பண்ணுகிறது. உன்னிடம் உடனே சொல்ல வந்தேன்.”