பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12 * லா. ச. ராமாமிருதம் "சரி, இவளுக்கு என்ன பேரை வைப்போம்?” அம்மாள் கொஞ்சலாய், "பிடாரி மாதிரி கத்தறது. பிடாரின்னு வையுங்களேன். நான் ஊர்ப் பிடாரி இவள் ஒண்ட வந்த பிடாரி' ஐயர், பிள்ளையார் சுழியிட்டு ஜனனி ஜன்ம செளக்கி யானாம் என ஆரம்பித்துவிட்டிருந்த கைக் காகிதத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் முகம் சட்டென மலர்ந்தது. குழந்தையைப் பார்த்து மெதுவாய்க் கூப்பிட்டார்: "ஜனனி, ஜனனி.” ※ 求 ※ “பாருங்கோ- பாருங்கோன்னா! கொழந்தை விளக்கைப் பாக்கறா!' பிறந்தபின் சக்தி முதல் முதலாய் இப்போதுதான் ஆண்டவனின் ஜோதி ஸ்வரூபத்தை விளக்குச் சுடரில் பார்க்கிறாள். தானும் அதுவாய் இதுவரை இழைந்திருந்துவிட்டு இப்பொழுது அதனின்று வெளிப்பட்ட தனிப் பொறியாய், அதனின்று விலகி, அதையே தனியாயும் பார்க்கையில், அதன் தன்மை ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. ஆனால் அவள் இப்பொழுது பொறியாயினும், அவன் தூணாய்த்தான் விளக்குச் சுடரில் நிற்கிறான். "ஜனனீ" "இதைப் பாக்கமாட்டேங்கறேளே! குழந்தை சிரிக்கிறா!' அம்மாள் தன் ஆனந்தத்தில் குழந்தை மாதிரி கைகொட்டிச் சிரிக்கிறாள். "ஜனனி விளையாட்டு போதுமா? திரும்பி வருகிறாயா?”