பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 & லா. ச. ராமாமிருதம் “தடக்-தடக்-தடக்' எங்கிருந்தோ குளம்பின் சப்தம் அவளை நோக்கி வருகிறது. மாடு அலறிக்கொண்டு ஒடிற்று. “தடக்-தடக்-தடக்' அதைத் துரத்திக்கொண்டு ஒடும் அந்தக் குளம்பின் சப்தம் துரத்தில் ஒய்ந்துகொண்டே போவது காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. தடக் தடக் தடக் தடக் தடக்இப்பொழுது சத்தம் நெருங்கி வருகிறது. ஆனால் மாட்டின் மிரண்ட ஒட்டத்தின் சப்தம் இப்பொழுது இல்லை. குதிரைக் குளம்புச் சப்தம் மாத்திரந்தான். கண்களைத் திறந்தாள். அவளுக்குச் சற்று துரத்தில் அது நின்றுகொண் டிருந்தது. செவ்வரி படர்ந்த அதன் கண்கள் அவளை ஊடுருவின. பிறகு அது சாவதானமாய்த் திரும்பி வாலைச் சுழற்றிக்கொண்டு, பிடரிமயிர் சிலிர்க்க தலையை உதறிக் கொண்டு எதிரே புதர்களிடையே சென்று மறைந்தது. ஜானா கண் விழித்துக்கொண்டாள். ஜன்னலுக்கு வெளியே ஆஸ்பத்திரியின் முற்றங்களிலும், தாழ்வாரங்களிலும் ஜோவென மழை கொட்டிக்கொண்டிருந்தது. அது அவள் உள்ளேயே பிரவாகமாய் இறங்கி உடல் நரம்புகள் ஒவ்வொன்றிலும் குளிர்ந்து பாய்வது போலிருந்தது. மறுநாள் அவள் ரத்த வாந்தியெடுக்கவில்லை. அடுத்த நாளும் இல்லை. அதற்கடுத்த நாள், அடுத்த நாள், அன்றி லிருந்தே இல்லை. எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாது தானாகவே போய்விட்டது. ஒருநாள் ஜானா வீடும் திரும்பிவிட்டாள். அவள் குணமாகி வந்து சேர்ந்ததுதான் தாமதம். சந்துரு திடீரென்று ஒரு இளைப்பு இளைத்து ஒரு நரை நரைத்தான். சாய்வு நாற்காலியில் உடம்பு பஞ்சாய், கைகால் போட்டது போட்டபடி