பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் & 2靠 בי) வேடிக்கை. ஆகையால் அவர்களுடைய வேடிக்கைக்காக நீ சாகப்போகிறாயா என்பதைத் தீர்மானம் பண்ணிக்கொள். நாளடைவில் உபயோகத்தால் நைந்து நேரும் உடல் அழிவைத் தான் தடுக்க முடியாது. ஆனால் இப்பொழுது உனக்கு வந்திருக்கும் சாவை நீ சாவதோ தவிர்ப்பதோ உன் இஷ்டத்தில் தான் இருக்கிறது. ஏனெனில் இந்தச் சாவை நீ செத்தால் அது சாவில்லை. நீ உயிருக்கு இழைக்கும் துரோகம் தவிர வேறில்லை.” ஆஸ்பத்திரியில் நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் வெளியே போவதற்காக மணியடித்தது. சந்துரு உயரமாய் எழுந்து நின்றான். நெற்றிப் பொட்டில் அடையடையாய் நரை யோடிய மயிருக்கும், அடர்ந்த புருவத்துக்கும், கூடிவரம் செய்ய மறந்து வளர்ந்த தாடிக்கும் அவன் ரிஷி போன்றிருந்தான். கனிவுடன் அவள்மேல் குனிந்தான். $4 ானா' "அண்ணா!”- அவள் உடல் பரபரத்தது. "நீ என் தம்பி-” அன்றிரவு அவள் ஒரு கனவு கண்டாள். அவளை ஒரு மாடு துரத்துகிறது. தட்டி நீட்டி நிமிர்த்திய கொடிக்கம்பி போல் வாலை உயர்த்திக்கொண்டு நாலுகால் பாய்ச்சலில், பீப்பாய் போன்ற உடல் குலுங்க அவளைத் துரத்துகிறது. அவள் ஒட அது ஒட, அவளை வெகு சீக்கிரம் நெருங்கிவிட்டது. அதன் மூச்சு அவள் முதுகை எரித்தது. "அம்மா! அம்மா-” கத்திக்கொண்டே ஓடுகிறாள். கல் ஒன்று தடுக்கிக் கீழே குப்புற விழுந்துவிட்டாள். மாடு அவள்மேலேயே வந்து கொண் டிருந்தது- வந்துவிட்டது. இனி எந்தக் கணம் கொம்புகள் முதுகில் ஏறிவிடப் போகின்றனவோ! கண்ணை இறுக மூடிக் கொண்டு விட்டாள்.