பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் జః 2:5 சிறகுகளை அடித்துக்கொண்டு தன்னிடமிருந்து தப்ப முயலும் ஒரு பச்சைக்கிளியை இரு கைகளாலும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்துக்கொண்டு சந்துருவைப் பார்த்துச் சிரிக்கிறான். சந்துரு செவிகளைப் பொத்திக்கொள்வான். “ஏண்டி, மருமான் முழிமுழியாய்ப் பேசறானாமே! நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா ஒரு தங்கை பிறந்திருக்காம். அதுலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம். என்னமோ உன் மன்னி அவ அம்மாவைக் கேட்டாளாம், “எனக்குத்தான் புத்தியில்லேன்னா என்னைக் கூட்டிண்டு வந்துட்டேளே'ன்னு. எங்கேடி போறான், பிள்ளைப்பாசம் இழுத்தால், தானா வரான்’னு என்னை அடக்கி அடக்கி வெச்சு அவரும் வரல்லே, என் வாழ்க்கையும் பாழ் பண்ணிட்டேள்' இன்னாளாம். நாங்கள் கூப்பிட்டோம்னா நீ ஏண்டி வந்தே? என்று அவ ஏசினாளாம். அப்படி இப்படி வார்த்தை முத்தி அவள் அம்மா பெண்ணை ஒரு அடிகூட அடிச்சுட்டாளாம். கேட்டையோ விபரீதத்தை அம்மாவாயிருந்தா என்ன, பெண்ணாயிருந்தா என்ன? அவாளவாளுக்குக் குழந்தைன்னு ஏற்பட்டுட்டா, அப்புறம் காட்டிலே வாழற புலி சிங்கங் கரடி தான். இந்தப் புத்தி அன்னிக்கே வந்திருந்தா இதெல்லாம் வேண்டாமோன்னோ? முதலையாவே பொறந்துட்டாக்கூட, ஆட்டை முழுங்கலாம், மாட்டை முழுங்கலாம், மனுஷனை முழுங்கலாம்; அதுக்கோசரம் ஆனையை முழுங்க முடியுமா? வாயைக் கிழிச்சிண்டு நிக்க வேண்டியதுதான்!-” அப்புறம் ஒருநாள், கோகுலாஷ்டமி தினம், குனிந்து கொண்டே, ஜானா வாசற்படியிலிருந்து இழை கோலத்தில் சிற்றடிகளைப் போட்டுக்கொண்டே நடை தாண்டிக் கூடத்துள் வந்துகொண்டிருக்கையில் திடீரென்று, வெறும் பால் சதையில் அப்பம்போல் இரு குழந்தைப் பாதங்கள் அவள் வரையும் சிற்றடிகளுடன் ஒன்றினாற்போல் இருந்தன. கதவோரத்தில்