பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 & லா. ச. ராமாமிருதம் ஸ்நானம் பண்ணிவிட்டு வேறு புடைவையுடன் கெளரி மறுபடியும் ரேழியில் வந்து நின்றாள். காலை வேளையின் சிறு குளிரில் உடல் கொஞ்சம் நடுங்கிற்று. அவள் முகத்தில் ஒன்றுமே தெரியவில்லை. அவள் முகமே ஒரு முகமூடி ஜானாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. ஐந்து வருஷங்களுக்கு முன் அன்றிரவு கண்டபடிதான் இன்னும் இருந்தாள். “என்னை மன்னிச்சுடுங்கோ.” அவள் வார்த்தைகளைச் சந்துரு வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை. "பையன் சட்டை நிஜார் எல்லாவற்றையும் கழற்று.” கழற்றினாள். “ஜானா, என் சொக்காய் ஜோபியில் கத்தியிருக்கிறது. கொண்டு வா.” "அண்ணா! அண்ணா!” என்று ஜானா அலறினாள். சந்துரு இன்னதுதான் செய்வான் என்று என்ன சொல்ல முடியும்? அவன் எதிர்பாராத தன்மைகளுடையவன். சந்துரு உள்ளே போய், பேனாக்கத்தியை எடுத்து வந்து, குழந்தை இடுப்புக் கயிற்றை அறுத்துக் கீழே எறிந்தான். "உன் வீட்டுத் துணிகளையும் கயிற்றையும் சுருட்டித் தெருவில் கொண்டுபோய் எறி.” கெளரி எறிந்துவிட்டு வந்தாள். அவள் கண்கள் பெருகின. “என்னை மன்னிச்சுடுங்கோ. சந்துரு கத்தியை மடக்கிக் கொண்டான், "நீ இந்த ஐந்து வருஷங்களாய் எப்படி இருந்தாய், என்ன பண்ணிக்கொண்டிருந்தாய் என்றெல்லாம் உன்னைக் கேட்கப் போவதில்லை. இந்த வீட்டிலும் உன்னை யாரும் கேட்கமாட் டார்கள். இது என் கட்டளை. ஆனால் இனி நீ இங்கு இருப்ப தற்கு ஒரே காரணந்தான் உண்டு. உன் வயிற்றில் பிறந்த இந்தக் குழந்தைக்கு நான் தகப்பனாயிருக்கிறேன். என்னுடைய