பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<! § கொட்டு மேளம் శః 22? வாழ்க்கை வதங்கிப் போவது ஆச்சரியமல்ல. ஆனால் வதங்கிப்போன நினைவு மாத்திரம் வாடாமல் வாசமும் இலாது இருக்கும் நிலைதான் பயங்கரம். “எனக்கென்று இப்பொழுது ஒன்றுமில்லை. இதுவரை என் வீம்பு இருந்தது. இப்பொழுது நான் அதனுடையதாய் விட்டேன்." வாழ்க்கை ஒரு பரீட்சைக் கணக்கு மாதிரிதானிருக்கிறது. எங்கேயோ எப்படியோ ஒரு சிறு தப்பு நேர்ந்துவிட வேண்டியதுதான்; விடை எங்கேயோ கொண்டுபோய் விட்டு விடுகிறது. இத்தனைக்கும் தெரிந்த கணக்கு புரிந்த கணக்கு முன்னால் போட்ட கணக்குத்தான். “என்னை மன்னிச்சுடுங்கோ !” இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடந்தேடி யலையும் வெளவால் போன்று, மன்னிச்சுடுங்கோ, மன்னிச்சுடுங்கோ என்ற வார்த்தையின் ஒலியும் உணர்வும் சதா நீந்திக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் ராமதுரை, குழந்தை, என்ன செய்வான்? ஜானா இல்லாவிடில் அவனும் பாழா யிருப்பான். இந்த வீட்டில் ஏதோ நேரக்கூடாதது நேர்ந்து விட்டதென மூங்கையாய்ப் புரிகிறது. நாளாக ஆக அரை குறையாகக் கொஞ்சங் கொஞ்சமாய் விவரங்கள் புரிந்து கொண்ட பிறகு, அவன் அத்தையுடனேயே ஒட்டிவிட்டான். சில சமயங்களில் அவளையே அம்மாவென்று கூப்பிட்டுப் பார்த்துக்கொள்வான். சந்துருவும் கெளரியும் ராமதுரையைப் பெற்று அவளிடம் கொடுத்தாற்போல்தான் ஆகிவிட்டது. தான் வளர்த்த பிள்ளை யின்மூலம் ஜானா தன் நினைவு பெற்றாள். ராமதுரையும் சமாளித்துக்கொண்டு விட்டான். நல்ல வேளையாக அவன் காவிய புருஷன் அல்ல. காவிய புருஷர் களாலும் தெய்வங்களாலும் பிறர்க்குப் பெரும் பயன்