பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஜனனி o 17 ஜன்மத்தின் முதல் பாடம் எண்ணியது எண்ணியபடி நடக்குமென்று எண்ணாதே!” வளர்ப்புத் தாய்க்கும் ஜனனிக்கும் இடையிலுள்ள பகை பயங்கரமாய் வளர்ந்தது. பகை அம்மாளுடையதேயாகையால், அதன் முழு வேகத்தையும், பாரத்தையும் அவளே தாங்கும் படியாயிற்று. இடாத வேலைகளை இட்டு, சொல்லாத சொற்களைச் சொல்லி, படாதபாடு எல்லாம் படுத்தினாள். “வயசுபாட்டுக்கு ஆறது. வேளா வேளைக்கு வந்து வயிறு புடைக்கத் திங்கறதோடு சரி. மத்தப்படி கண்ணிலே படறதில்லே. எல்லைக் காளியா ஊரெல்லாம் சுத்தித் திரிஞ்சுப்பிட்டு அவர் வருகிற வேளைக்கு இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமான்னு விளக்கெதிரே கண்ணை மூடிண்டு உட்கார்ந்திருக்கையேடி! எந்த ஊரைப் பொசுக் கலாம்னு யோசனை பண்ணிண்டிருக்கே? “இல்லேம்மா." “என்னை 'அம்மாங்காதேடி உன்னை ஆசையா அடித் துணியோடு, எந்தக் குளத்தங்கரைப் படிக்கட்டிலேருந்து கொண்டு வந்தாரோ, அங்கே போய் உன் அம்மாவைத் தேடு. அம்மாவாம், அம்மா! என்ன சொந்தண்டியம்மா!” ஆகவே, ஜனனி, இன்னதென்று விளங்காத மனக்கனத் துடனும் வீறாப்புடனும் குளத்தண்டை போய், தன்னையும் அறியாமல், தன்னைத்தானே தேடுகிறாள். ஆனால் அங்கு என்ன இருக்கிறது? ஆழந்தான் இருக்கிறது. சட்டையும் பாவாடையுமாய் ஜனனி, கையோடு கை கோத்துக்கொண்டு, குளத்தங்கரைப் படிக்கட்டில் திகைத்து நிற்கிறாள்.