பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28 * லா. ச. ராமாமிருதம் அவர்களுக்கு, நல்ல எண்ணமோ கெட்ட எண்ணமோ) குதுகலமாய்த்தான் இருந்தது. ஜனனி ஒருநாள் பகலில் குளித்துக்கொண்டிருந்தாள். திடீரென்று தன்னை யாரோ ஊன்றிக் கவனிப்பது போன்ற உணர்ச்சி எழுவதை உணர்ந்தாள். சுற்றுமுற்றும் நோக்கினாள். எதிர்க்கரையில் ஒருவன் தன்னையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் முகத்தைப் பார்க்கவில்லை. தன்னிடம் என்ன என்று பார்த்துக் கொண்டாள். வலது விலாப்புறத்தில், தோள் குழிவுக்கு அடியில், ரவிக்கை இரு பாதிகளும் ஒட்டிய இடத்தில், உடல் வளர்ச்சியையே தாங்கமுடியாமல், தையல் தாராளமாய் விட்டிருந்தது. வெயில் படாத அவ்விடத்துச் சதை தனி வெண்மையுடன் பிரகாசித்தது. ஜனனி மனத்தில் தனி பயங்கரம் திடீரெனக் கண்டது. அப்படியே புடவையை வாரிச் சுருட்டிக்கொண்டு வீட்டுக்கு ஒட்டம் பிடித்தாள். அவள் உடலெல்லாம் வெடவெடத்தது. அன்று முழுவதும் மனம் சரியாயில்லை. ஆயினும் தான் படுவது இன்னதெனத் தெரியவில்லை. அதனாலேயே வேதனை அதிகரித்தது. முதல் முதலாய் ஜனனி தனக்குத் தானே புரியாத சிந்தனையில் ஆழ்ந்தாள். இரவு படுத்தும் வெகுநேரம் தூக்கம் வரவில்லை. - நள்ளிரவில், ஜனனி திடுக்கென விழித்துக்கொண்டாள். உடலில் மறுபடியும் பயங்கரமான புல்லரிப்பு. அவளையும் மீறியதோர் சக்தி வசப்பட்டவளாய்க் கட்டிலினின்று எழுந்து ஜன்னலண்டை போய் நின்றாள். முழு நிலவின்மேல் கருமேகங்கள் சரசரவெனப் போய்க் கொண்டிருந்தன. தெருவில் வீட்டு வாசற்படியெதிரில் ஒர் உருவம் நின்றது. வெள்ளைத் துணி போர்த்து, நெட்டையாய், கைகளை