பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 * லா. ச. ராமாமிருதம் நின்றன. கூட வந்தவர்களுக்கு அதையும் இதையும் அங்கும் இங்குமாய் இன்னொரு கையால் சுட்டிக் காண்பித்தான். “சரி, காட்டைக் கழித்தெறியுங்கள்! ரோட்டைப் போடலாம்” என்றான். ஆகவே அன்றோ, அதற்கடுத்த நாளோ, மாதமோ, வருடமோ ஆட்களும் யந்திரங்களும் அவ்விடம் வந்து சேர்ந்தன. வானளாவியவற்றையெல்லாம் காலடியில் வெட்டி வீழ்த்தின. காலடியில் இருந்தவற்றைக் களைந்தெறிந்தன. அன்று இரவு வந்தபொழுது, கூலிகள் அங்கே தங்குவ தற்குப் போட்டிருந்த சிறுசிறு கூடாரங்களினின்றும் பொறி விளக்குகள், இருளைக் குத்துக் குத்தெனக் குத்தின. வேலை நடந்துகொண்டிருக்கையிலேயே கூடாரங்கள் மறைந்து குடிசைகள் தோன்றின. நாளடைவில் குடிசை களுக்குப் பக்கத்திலும் ஒதுக்கத்திலும் வீடுகள் முளைத்தன. மேட்டு நிலத்தில் ஒரு ரோடும் வளைந்து வளைந்து ஒடியது. மனிதன் தான் கட்டிய ரோட்டைத் தானே திறந்து வைத்தான். அவர்களுள் பெரிய மனிதன் ஒருவன், தான் ரோட்டைத் திறந்து வைத்ததற்கு அறிகுறியாய், தன் வண்டியை அந்த ரோட்டின்மேல் விட்டுக்கொண்டு சென்றான். அந்தப் பெரிய மனிதன், மற்ற மனிதர்களைவிட இரண்டோர் அங்குலம் குட்டையாய்த்தான் இருந்தான். வலியால் துடிக்கும் அவன் வயிற்றுள் உணவு எல்லோரையும் விட ஒரு பிடி குறைவாய்த்தான் இறங்கியது. ரோட்டைத் திறந்து வைத்த பிறகு வேளை வந்து அவன் செத்த பிறகு, முன்னுக்கு வருவதற்காக முறுக்கான வயசில் அவன் இழைத்த பல காரியங்களின் பலனாய், போகிற