பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகம் |- $1 "திடீர்னு என்னவோ தெரியல்லே, எனக்கு ஒரே அழுகையா வந்துடுத்து. அதுக்குக் காரணங்கூடத் தெரியல்லே. முகத்தைக் கையில் புதைச்சுண்டு விக்கி விக்கி அழுதேன். என்னை திடீர்னு ரெண்டு கை வாரி அணைச்சுது. யார் இன்னு கண்டதும் பஞ்சிலே நெருப்பு வெச்ச மாதிரிதான் ஆயிடுத்து. “ஐயோ என்னைத் தொடாதேங்கோன்னு ஒரு கத்தல் கூடத் தொண்டையிலேருந்து எழும்பல்லெ. என் துக்கமும் ஒரே வெறியாயிடுத்து. அவ்வளவுதான், தப்பு யார்மேலேன்னு சொல்லுவேன்! யார்மேலேன்னு சொல்வேன்!” “யார் அந்தப் பாவி, ஆள் ஏமாந்த சமயம் பார்த்துப் பயன் பண்ணிண்ட பாவி- ஏன் பயப்படறே? அந்த ஆசாமி யார்? உனக்குத் தெரிஞ்சவனாய்த்தான் இருக்கணும். உன் மனசுக்கு ஒப்பியவனாயுந்தான் இருக்கணும். இல்லாட்டா, அவன் உன்னைத் தொட்டவுடனே அப்படி அறிவிழந்திருக்க மாட்டே எனக்கு இதிலெல்லாம் கொஞ்சம் அதுபோகம் உண்டு. எனக்கு நாலு பெத்திருக்கு, செத்திருக்கு பார்; யாரு, சொல்!” ஆனால் அவள் சிநேகிதி பதில் பேசவில்லை. திக்பிரமை பிடித்தவள்போல் இருந்தாள். "சொல்லேண்டி இது விளையாடற சமயமில்லே. வெறுமனே என் தாலிச் சரட்டைத் தொட்டு நெருக்கிண் டிருந்தால் என்ன அர்த்தம்?” ஆயினும் பதில் வரவேயில்லை. பீரிடும் அழுகையை அடக்கிக் கொண்டு அந்தப் பெண் மற்றவளின் மாங்கல்யத் தைப் பிடித்து, அவள் கண்ணெதிரில் ஆட்டிவிட்டு அவள் மடியில் அப்படியே சாய்ந்தாள். 'ஆ என்ன!”