பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“என்னுடன் வந்துவிடு-” தன் மூக்கில் விரலை வைத்தாள், கேலி ஆச்சரியத்துடன். 'ஏது, உன் நெஞ்சுத் துணிச்சல் என்னைக்கூடத் திக்குமுக்காடச் செய்கிறது- என்றாள். "ஏன் நீ ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? உன்னை வெறுமெனச் சோதித்துப் பார்த்தேன். உன் அந்தஸ்துக்கு ஒருநாளும் நான் குறைந்தவனல்ல. நீ நினைத்துக்கொண் டிருக்கிற மாதிரி நான் ஒன்றும் அன்னக் காவடி இல்லை. என் அண்ணன் ஜமீன்தார். நான் வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடிவந்துவிட்டேன். கோபம் தணிந்ததும் என் இடத்துக்கு நான் போக வேண்டியதுதானே!-” 'ஒஹோ’! அதற்குமேல் பேச அவளுக்கு நா எழவில்லை. “எங்கள் மேல் இருள் இறங்க ஆரம்பித்தது." sk 来 ※ 'அன்றிரவு நாங்கள் இருவரும், ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் போய்க்கொண்டிருந்தோம். தொலைதூரத்துக்கு டிக்கட் வாங்கிவிட்டேன். நான் வெகு நாழிகை எழுதிக்கொண்டிருந்தேன். தூக்கக் கலக்கத்துடன் கைகளை முறித்துக்கொண்டு என்னிடம் அவள் வந்தாள். ‘என்ன எழுதுகிறாய்? என்றாள். 'உன் தகப்பனாருக்குக் கடிதம்- என்றேன். அவள் திரும்பிப் படுத்துக்கொண்டு தூங்கிவிட்டாள். படுக்கையில் உறுத்துமென்றும், பொது ஜாக்கிரதைக்காகவும் நகைகளைக் கழற்றிப் பெட்டியில் வைத்துவிட்டாள். பெட்டிச் சாவி என்னிடமிருந்தது.