13
யாக இருக்க வேண்டுமென்று கூறும் நமது " நல்லறிவாளர்கள் "
ஆங்கில மக்கள் தான் என்றென்றும் விஞ்ஞானத் தறையில் முன் நிற்பார்கள் என்று கருதுகிறார்களா? ஜெர்மானிய மக்களோ,
அதைவிட சோவியத் மக்களோ, ஆங்கில மக்களை விட விஞ்ஞானத் துறையில் முன்னேறவில்லையென்றோ, முன்னேற முடியாதென்றோ கூறுகிறார்களா? தமிழ் மக்களால் அத்தகைய முன்னேற்றம் காளா வட்டத்தில் பெறமுடியாது என்பதும் தமிழ் மக்களின் முன்னேற்ற உணர்ச்சியும், கூரிய சீரிய மதிநலமும் அஸ்தமித்து விட்டது என்பது இவர்களின் முற்ற முடிந்த முடிபா?
- ராஜாஜியாலும், அண்ணாத்துரையாலும், நெடுஞ்செழியனாலும், ராமசாமி, லெட்சுமணசாமி முதலியார்களாலும், டாக்டர்
அய்யர்களாலும், அவர்கள் காலத்தில் கல்லூரிகளில் தமிழை விஞ்ஞான மொழியாக்க முடியாதென்றால், யார் அந்தப் பெரும் பணியைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள்? அவர்கள், அவர்களுக்குப் பின்வரும் தலைமுறைகளில் தோன்றும் சுரணை கொண்ட தமிழர்கள் செய்ய வேண்டுமென்பதுதானா அவர்களின் கருத்து?
- வளர்ந்துவரும் தமிழனையும், வளர்ந்துவரும் தமிழையும்,
தமிழ் எத்துறையிலும் அரசு வீற்றிருக்க முடியும் என்கின்ற நன்னம்பிக்கை முழுநிறைவாக ஏற்படுகிறது.
- அவர்களால் உச்சிமேல் வைத்து மெச்சப்படும் ஆணானப்பட்ட
ஆங்கிலம் பிறமொழித் தயவின்றி எடுத்த எடுப்பிலே யே விஞ்ஞான மொழியாகிவிட்டதா? விஞ்ஞானத் துறையில் 200, 300 ஆண்டுகள் வளர்ந்த பிறகும், ஆங்கிலம் இன்றும் எத்தனையெத்தனையோ விஞ்ஞானச் சொற்களையும், கலைச் சொற்களையும் லத்தீன் போன்ற மொழிகளிலிருந்து எடுத்து உபயோகித்து வருகிறது என்பது யாரே அறியார்? எனவே, தமிழனும் தமிழில் விஞ்ஞான அறிவுச் செல்வத்தைக் கொண்டுவந்துவிட வேண்டுமென்று துணிந்து இடையறாத முயற்சியில் இறங்கிவிடுவானானால் - இன்று இறங்கி வருகிறான் - உலகத்து மக்களோடு ஈடுஜோடாக முன்னேறு வான் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகத்துக்கிடமில்லை. வேண்டுவதெல்லாம் தமிழ் வளர வாய்ப்பும் வசதியும்தான். தண்ணீரில் இறங்கினால் தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும். கல்லூரிகளில் தமிழை விஞ்ஞான மொழி ஆக்கினால் தான் தமிழ் விஞ்ஞானத் துறையில் முன்னேற பெரும் வாய்ப்பும் வசதியும் கிடைக்கும்.
- பல நாட்டு அனுபவங்களும் தேசீய, நமது ஜனநாயக இயக்க
வரலாறும், ஐயம் திரிபுக்கிடமின்றிக் கற்றுக்கொடுக்கும் படிப்பினை இதுதான்.
- ஆகவே, மூன்று கோடி தமிழ் மக்களும் எத்தகைய பேதமும்
ஜீ-3