பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



14

பாராட்டாது கல்லூரிகளில் விஞ்ஞானத் துறையிலும், தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் நாட்டில் தமிழ் மக்களின் சகல துறைகளிலும் தமிழே ஆட்சி செலுத்தத் தகுந்த சிறந்த குழ்நிலையை ஒன்றுபட்டு உருவாக்குவதே அவசர அவசியக் கடமையாகும். இதுதான் கம்யூனிஸ்டுக் கட்சியின் பணிவான வேண்டுகோள்.

ஹிந்தியின் இடம்
இந்தச் குழ்நிலை உருவாகிவிடுமானால், இதற்காக மத்திய சர்க்காரும் ராஜ்ய சர்க்காரும் தமிழின் தங்குதடையற்ற வளர்ச்சிக்குப் பண உதவியும், இதர உதவிகளும் செய்ய முன்வந்து

மக்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் பெற்று விடுவார்களானால், 'இன்றைய ஆங்கில ஆதிக்கத்தின் இடத்தில் இந்தியின் ஆதிக்கம் ஏற்படும் என்ற பயத்துக்கு இடமிராது என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது இந்தியும், ஆங்கிலமும் பாரத நாட்டிலும் சரி, தமிழகத்திலும் சரி, நியாயமாக எந்தெந்த இடங்களில் இருக்கவேண்டுமோ அந்தந்த இடங்களில் இருக்கவேண்டும்.

மத்திய சர்க்கார் நிர்வாக மொழியாகவும், மத்திய-ராஜ்ய

சர்க்கார் இணைப்பு மொழியாகவும், இந்திய மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் ஒற்றுமைக்கு துணைமொழியாகவும் இருக்க வேண்டிய அளவே, இந்தி மொழிக்கு பொதுத்தேவை இருக்கும்.

நவீன உலகியல் கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கு,உலக விவகாரங்களுக்கு உதவிகரமாக இருப்பதற்கு தேவைப்படுகிறவர்கள், பிரெஞ்சு, ரஷ்ய, ஜெர்மன், சீன மொழிகளைப்போன்று

ஆங்கிலமும் கற்றால் போதுமென்ற நிலைமை ஏற்படும். அந்தச் சூழ்நிலை ஏற்படுகிறவரையில் ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபிக்கவில்லை" என்றார்.

இந்தி எதிர்ப்பாளர் போக்கு
"தோழர்களே! இனி இன்றைய இந்தி எதிர்ப்பைச் சற்று கவனிப்போம். இந்தி எதிர்ப்பு உணர்ச்சி ஓட்டம் முக்கவுடுகளாகத் திரிந்து இயங்குகிறது என்று கருதுகிறேன்.
ஒன்று இந்தி மொழியை எதிர்த்து, சிறுமைப்படுத்திப் பேசுவதே மேலோங்கி நிற்கும் போக்கு, இந்தியை அநியாயமாக இந்தி அல்லாதார் தலையில் திணிப்பதை எதிர்த்துப் போராடுவதுதான் நியாயமேயன்றி, இந்தி மொழியையே எதிர்ப்பது சிறிதுகூட அழகல்ல. இந்தி பேசும் கோடானு கோடி மக்களும் இந்தி

திணிப்பு வெறியர்களும் ஒன்றெனப் பார்ப்பது சற்றும் அழகல்ல. கடந்த 150,200 ஆண்டைய ஆங்கில ஆதிக்கத்தால் இந்தியாவி